ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

கடந்த 2021 மே மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

இந்திய சந்தையை பொறுத்தவரையில், அதிகளவில் விற்பனையாகும் இருசக்கர வாகனம் என்றாலே அது ஹீரோ ஸ்பிளெண்டர் தான். இது கடந்த மே மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 84,043 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது இதற்கு முந்தைய 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் பாதிக்கு பாதி ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

ஏனெனில் அந்த மாதத்தில் 1,61,576 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்பிளெண்டர் மட்டுமின்றி கொரோனா இரண்டாவது அலை பரவலால் கடந்த மே மாதத்தில் கிட்டத்தட்ட வாகனங்கள் அனைத்தின் விற்பனையும் கணிசமாக குறைந்துள்ளதை முன்னரே தெரிவித்திருந்தோம்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மாதத்தில் இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் டீலர்ஷிப் ஷோரூம்கள் மூடப்பட்டன. இதனாலேயே விற்பனை பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் ஸ்பிளெண்டருக்கு அடுத்து இரண்டாவது இடத்திலும் ஹீரோ மோட்டோகார்ப்பின் பைக்கே உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் 42,118 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையும் 71,294 எச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 40.9 சதவீதம் குறைந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

பஜாஜ் பல்சர் பைக்குகள் 28,636 என்கிற விற்பனை எண்ணிக்கையுடன் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இதன் விற்பனையில் பெரிய அளவில் தடுமாற்றம் இல்லை. நான்காம் இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி 19,885 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

வரிசையாக பைக் மாடல்களை மட்டுமே பார்த்துவருவதால் இதனை அதிகளவில் விற்பனையான பைக்குகளின் லிஸ்ட் என நினைத்துவிட வேண்டாம், ஸ்கூட்டர் மாடல்களும் உள்ளன.

Rank Model May 2021 April 2021 Growth (%)
1 Hero Splendor 84,043 1,61,576 -47.9
2 Hero HF Deluxe 42,118 71,294 -40.9
3 Bajaj Pulsar 28,636 35,891 -20.2
4 TVS Apache 19,885 29,458 -32.5
5 Honda Activa 17,006 1,09,678 -84.5
6 Hero Splendor 125 16,392 31,941 -48.7
7 Honda CB Shine 14,666 79,416 -81.5
8 Bajaj Platina 11,164 35,467 -68.5
9 Suzuki Access 9,706 53,285 -81.8
10 Royal Enfield Classic 350 9,239 23,298 60.3

எப்போதும் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து அதிகளவில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா இம்முறை ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

கடந்த மாதத்தில் வெறும் 17,006 ஆக்டிவா ஸ்கூட்டர்களையே ஹோண்டா நிறுவனம் விற்றுள்ளது. ஆனால் முந்தைய ஏப்ரல் மாதத்தில் சுமார் 1,09,678 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனையில் சுமார் 84.5 சதவீத வீழ்ச்சியை ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் சந்தித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

இந்த லிஸ்ட்டில் ஆறாவது இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் 125 பைக் உள்ளது. வழக்கமான ஸ்பிளெண்டர் பைக்குகளை தவிர்த்து 16,392 125சிசி ஸ்பிளெண்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆக்டிவாவை போல் எப்போதும் அதிகளவில் விற்பனையாகக்கூடிய ஹோண்டா சிபி ஷைனின் விற்பனை எண்ணிக்கை 79,416ல் இருந்து கடந்த மே மாதத்தில் 14,666 ஆக குறைந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு என்னாச்சு? 84.5 சதவீதம் குறைந்தது...

மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஹோண்டாவின் இருசக்கர வாகன விற்பனை பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இதில் இருந்து கொரோனா இரண்டாவது அலையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 two-wheeler models in May 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X