தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கைகளுடன் தெரியவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

புதிய 2021ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஹோண்டாவின் பிரபல ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹோண்டாவிற்கு கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிறந்த விற்பனை வாகனமாக இந்திய சந்தையில் விளங்கிவரும் ஆக்டிவா கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 2,11,660 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தாலும், ஆக்டிவாவின் விற்பனை 2020 ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் 9.84 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 2,34,749 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

ஆக்டிவாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நமது தமிழக இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ்-இன் ஜூபிட்டர் 51,952 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2020 ஜனவரியில் வெறும் 28,689 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களே விற்கப்பட்டு இருந்தன.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

இந்த வகையில் இதன் விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் சுமார் 34.28 சதவீத முன்னேற்றத்தை கண்டுள்ளது. அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்ஸஸின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 45,475 ஆகும். இந்த எண்ணிக்கை 2020 ஜனவரியை காட்டிலும் 16.70 சதவீதம் குறைவாகும்.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

புள்ளீங்கோகளின் ஃபேவரட்டான ஹோண்டா டியோவின் கடந்த ஜனவரி மாத விற்பனை 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஜனவரியில் 28,914 டியோ ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

டிவிஎஸ் எண்டார்க் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஜூபிட்டர் மட்டுமின்றி எண்டார்க்கின் விற்பனையிலும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஏனெனில் 2021 ஜனவரியில் 2020 ஜனவரியை காட்டிலும் 35 சதவீதமாக 27,766 எண்டார்க் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

மோட்டார்சைக்கிள் விற்பனையில் எப்போதுமே முதலிடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப்பின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ப்ளஷர் சுமார் 339 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் இந்த லிஸ்ட்டில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. 2020 ஜனவரியில் வெறும் 4,239 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த இந்த ஹீரோ ஸ்கூட்டர் கடந்த மாதத்தில் சுமார் 18,603 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

அதேபோல் இதற்கு அடுத்து 7வது, 8வது மற்றும் 9வது இடங்களில் உள்ள யமஹா ரே, ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையும் கடந்த மாதத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் மிகவும் குறைவாக வெறும் 394 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் கடந்த மாதத்தில் மொத்தம் 9,484 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

இந்த எண்ணிக்கை சுமார் 2307 சதவீதம் அதிகமாகும். அதேபோல் சுஸுகி பர்க்மேனின் விற்பனையும் கிட்டத்தட்ட 1350 சதவீதம் உயர்ந்துள்ளது. பத்தாவது இடத்தில் உள்ள யமஹா ஃபேஸினோவின் விற்பனை எண்ணிக்கை 11,647ல் இருந்து 8,416 சரிந்துள்ளது.

தற்போதைக்கு இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் எது தெரியுமா? பர்க்மேனை விற்றுதள்ளும் சுஸுகி

இந்த விற்பனை அட்டவணையின் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள் வழக்கமான ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்ஸஸ், ஹோண்டா டியோ மற்றும் யமஹா ஃபேஸினோ போன்ற ஸ்கூட்டர்களில் இருந்து கொஞ்சம் மாற்றாக ஹீரோ ப்ளஷர், யமஹா ரே, ஹீரோ டெஸ்டினி மற்றும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் பக்கம் வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top Selling Scooter Jan 2021. Read In Tamil.
Story first published: Saturday, February 20, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X