அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

டோர்க் மோட்டார்ஸ் நிறுவனம் டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ரூ.1.25 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்து கிட்டத்தட்ட 5 வருடங்களாகிவிட்டன. வாடிக்கையாளர்களின் கணிசமான கவனத்தை பெற்றுவந்த இந்த எலக்ட்ரிக்கிற்கான முன்பதிவுகள் அறிமுகமான சமயத்தில் ஒரே நாளில் ஆயிரத்தை கடந்து ஆச்சிரியப்படுத்தி இருந்தது.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இருப்பினும் பொருளாதார நெருக்கடிகள், செயல்பாட்டு பிரச்சனைகள் மற்றும் கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை தயாரிப்பதில் தயாரிப்பு நிறுவனத்திற்கு சில தடைகள் எழுந்தன. இதனை சமாளிக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை டோர்க் மோட்டார்ஸ் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது டி6எக்ஸ் தொடர்பான இந்த டீசர் வீடியோவினை டோர்க் மோட்டார்ஸின் நிறுவனர் கபில் ஷெல்கே அவரது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், டி6எக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவழித்தாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

மேலும் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் கபில் ஷெல்கே பதிவு செய்துள்ளார். இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் விற்பனையில் குறைந்த நிறுவனங்களே ஈடுப்பட்டு வருகின்றன. டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கு ரிவோல்ட் ஆர்வி400, ஜோ இ-மான்ஸ்டர் மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள ஹோப் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் போட்டியாக விளங்கவுள்ளன.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் இறங்கிய முதல் நிறுவனம் டோர்க் மோட்டார்ஸ் ஆகும். பேட்டரி தொகுப்பை தவிர்த்து டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கான பாகங்கள் அனைத்தையும் உள்நாட்டில் இருந்தே பெறவுள்ளதாக இந்த நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. எப்படியோ, டி6எக்ஸ் பைக்கை வாங்க விரும்புவோர் காத்திருக்க வேண்டிய காலம் நிறைவு பெறவுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஏனெனில், இத்தனை வருடங்களாக பல இன்னல்களை சந்தித்து வந்தாலும், டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிப்பதில் இன்னமும் ஈடுப்பட்டு வருவதாக டோர்க் மோட்டார்ஸ் சிஇஓ கபில் ஷெல்கே தற்போது தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை கால முதலீடு எங்களை சிறந்த தயாரிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த சந்தை நிலைமை வேறு, இப்போது இருப்பது வேறு. இதனால் டி6எக்ஸ்-இன் டிசைன், வசதிகள் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை முக்கியமான மாறுதல்களை ஏற்றுள்ளன. மறுபக்கம் இவி தொழிற்நுட்பத்தை தயாரிப்பதிலும் டோர்க் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

புது டிசைனில் எல்இடி ஹெட்லைட் & டெயில்லேம்ப்-ஐ பெற்றிருக்கும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை அப்டேட்டான சேசிஸில் வடிவமைத்துள்ளனர். அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட ஸ்விட்ச் க்ளஸ்ட்டர் மற்றும் பெரிய பேட்டரி தொகுப்பினை இந்த எலக்ட்ரிக் பைக் பெற்று வரவுள்ளது. பெரிய அளவிலான பேட்டரியினால், கூடுதல் ஆற்றல் மற்றும் டார்க் திறனை எதிர்பார்க்கிறோம்.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

டி6எக்ஸ்-இல் பொருத்துவதற்கு, 100%-இல் கிட்டத்தட்ட 96% திறனை வழங்கக்கூடிய அச்சுப் பாய்வு மோட்டாரையும் டோர்க் மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் டோர்க் மோட்டார்ஸின் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது கூட டோர்க் டி6எக்ஸ் பலரையும் கவரக்கூடிய வகையில் ரேஞ்ச்சையும் (100கிமீ), டாப் ஸ்பீடையும் (100kmph) கொண்டிருந்தது.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

அந்த சமயத்தில் இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்ட 6 கிலோவாட்ஸ் ப்ரஷ்லெஸ் மாறுதிசை மின்னோட்ட மோட்டார் அதிகப்பட்சமாக 27 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. அப்டேட் செய்யப்பட்ட டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் டோர்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

அப்டேட் செய்யப்பட்டதற்கு பிறகு டோர்க் டி6எக்ஸ் மற்ற போட்டி மாடல்களுக்கு எந்த அளவில் போட்டியினை வழங்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்சமயம் ரிவோல்ட் ஆர்வி400 பைக் மிகுந்த பிரபலமான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் விளங்குகிறது. ஆர்வி400 பைக்கிற்கான முன்பதிவுகள் கடந்த ஜூலையில் துவங்கப்பட்ட நிலையில், வெறும் 10 நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்டவை அனைத்து விற்று தீர்க்கப்பட்டன.

Most Read Articles

English summary
Tork T6X Electric Motorcycle Ready For Launch – CEO Shares New Teaser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X