டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அதன் புதிய கோல்டு லைன் எடிசன் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் டிரையம்ப் பைக்குகளை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனம் இன்று மொத்தம் அதன் 9 ஸ்பெஷல் எடிசன் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் ராக்கெட்3 ஜிடி 221, ராக்கெட்3 ஆர் 221 மற்றும் ஸ்ட்ரீட் ட்வின் இசி1 மாடல்களின் புதிய ஸ்பெஷல் எடிசன்களை பற்றி மற்றொரு செய்தியில் விரிவாக பதிவிட்டுள்ளோம்.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

ஆதலால் இந்த செய்தியில், டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் கோல்டு லைன், பொன்னேவில்லே டி100 கோல்டு லைன், பொன்னேவில்லே டி120 கோல்டு லைன், பொன்னேவில்லே டி120 ப்ளாக் கோல்டு லைன், பாப்பர் கோல்டு லைன் மற்றும் ஸ்பீடுமாஸ்டர் கோல்டு லைன் என்ற மற்ற 6 புதிய டிரையம்ப் கோல்டு லைன் பைக்குகளை பற்றி பார்ப்போம்.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.9.95 லட்சம், ரூ.10.09 லட்சம், ரூ.11.79 லட்சம், ரூ.11.79 லட்சம், ரூ.12.75 லட்சம் மற்றும் ரூ.12.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொன்னேவில்லே டி120 கோல்டு லைன் மற்றும் ப்ளாக் கோல்டு லைன் பைக்குகளின் விலைகள் ஒரே மாதிரியாக ரூ.11.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

அதேபோல் வெவ்வேறான உடலமைப்பை கொண்ட பாப்பர் கோல்டு லைன் மற்றும் ஸ்பீடுமாஸ்டர் கோல்டு லைன் பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் ஒரே அளவில் ரூ.12.75 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளன. பெயருக்கு ஏற்ப, இந்த ஆறு கோல்டு லைன் பைக்குகளும் தங்களது வழக்கமான பெயிண்ட்டில் புதியதாக தங்க நிற தொடுதல்களை பெற்றுவந்துள்ளன.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

இந்த மாடர்ன் கிளாசிக் பைக்குகளில் இந்த கோல்டு நிற ஹைலைட்கள் வெறும் கையால், பிரத்யேகமாக கொடுக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2022ஆம் ஆண்டில் இருந்து டெலிவிரிகளை துவங்கவுள்ள இவை வெறும் 1 ஆண்டிற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் கோல்டு லைன் எடிசன்

இந்த கோல்டு லைன் எடிசன் பைக்கில் மேட் பசுபிக் நீல நிற பெட்ரோல் டேங்க் பகுதியிலும், கிராபைட் ஸ்ட்ரிப்-ஐ கொண்ட ஓட்டுனர் கால்முட்டி பாதுகாப்பான் பகுதியிலும் கோல்டு நிறத்தை பார்க்க முடிகிறது. 'ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர்' லோகோவை கொண்ட பக்கவாட்டு பேனல்களின் அதே ஜெட் கருப்பு நிறத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் மட்கார்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

பொன்னேவில்லே டி100 கோல்டு லைன் எடிசன்

பொன்னேவில்லே டி100 கோல்டு லைன் எடிசனில் பெட்ரோல் டேங்க், முன் & பின்பக்க மட்கார்ட்கள் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் என முதலாவதாக நம் கண்ணில் படக்கூடிய பாகங்கள் அனைத்தும் சில்வர் நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, இந்த பைக்கிலும் கோல்டு நிறத்தை 'டிரையம்ப்' லோகோவை கொண்ட பெட்ரோல் டேங்க் பகுதியிலும், 'பொன்னேவில்லே டி100' லோகோவை கொண்ட பக்கவாட்டு பேனலிலும் பார்க்க முடிகிறது. அதேநேரம் பச்சை நிறமும் பைக்கை சுற்றிலும் ஆங்காங்கே தென்படுகிறது.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

பொன்னேவில்லே டி120 கோல்டு லைன் எடிசன்

பொன்னேவில்லே டி100 மாடலுக்கும், டி120 மாடலுக்கும் தோற்றத்தில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோல் பக்கவாட்டு பேனல்களில் வழங்கப்படும் கோல்டு & பச்சை நிற கிராஃபிக்ஸிலும் பெரியதாக எந்த வேறுப்பாட்டையும் காண முடியவில்லை. பெட்ரோல் டேங்கில் கொடுக்கப்படும் 'டிரையம்ப்' லோகோவின் டிசைனில் இவை இரண்டிற்கும் இடையே சற்று வித்தியாசம் உள்ளது. மேலும், டி120 மாடலில் என்ஜின் அமைப்பு பைக்கின் சில்வர் நிறத்திலேயே கொடுக்கப்படுகிறது.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

பொன்னேவில்லே டி120 ப்ளாக் கோல்டு லைன் எடிசன்

பொன்னேவில்லே டி120 பைக்கின் ப்ளாக் எடிசனான டி120 ப்ளாக் பைக்கிற்கும் கோல்டு லைன் எடிசன் வழங்கப்பட்டுள்ளது. முழுவதுமாக மேட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்படும் இந்த பைக்கிலும் கோல்டு நிறம் பெட்ரோல் டேங்க் & பக்கவாட்டு பேனல் பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த ப்ளாக் கோல்டு எடிசனில் கருப்பு, கோல்டு & சில்வர் நிறத்தை தவிர்த்து வெள்ளை, பச்சை போன்ற நிறங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக இது மற்றவைகளில் இருந்து தனித்து தெரிகிறது.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

பொன்னேவில்லே பாப்பர் கோல்டு லைன் எடிசன்

டிரையம்ப் பொன்னேவில்லே பாப்பர் மோட்டர்சைக்கிளின் முதன்மையான பெயிண்ட் கார்னிவல் சிவப்பு ஆகும். இதில் கோல்டு நிறம் பெட்ரோல் டேங்கில் முத்திரைகளாகவும், கருப்பு நிற பக்கவாட்டு பேனலில் லைனிங் உடன் 'பாப்பர்' லோகோவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாய் மொத்த பைக்கில் இருந்து தனித்து தெரியும் வகையில் சில்வர் நிறத்தில் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது.

டிரையம்ப்பின் புதிய 6 கோல்டு லைன் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.9.95 லட்சம்!

பொன்னேவில்லே ஸ்பீடுமாஸ்டர் கோல்டு லைன் எடிசன்

அளவில் பெரியதாக காட்சியளிக்கும் இந்த டிரையம்ப் பைக்கில் சில்வர் நிற பெட்ரோல் டேங்க் பகுதியிலும், கருப்பு நிற பக்கவாட்டு பேனலிலும், தங்க நிற தொடுதல்கள் லோகோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் ஹெட்லேம்ப் மற்றும் மட்கார்ட்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph gold line editions launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X