புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

புத்தம் புதிய MG Astor காருக்கு இணையான விலையில் 2021 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் (2021 Triumph Street Scrambler) பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி (MG) நேற்றைய (அக்டோபர் 11) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்டர் (Astor) எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு ரூ. 9.78 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

இந்த கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உச்சபட்ச தேர்வின் விலையே ரூ. 16.78 லட்சமாக மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில், அஸ்டர் எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு நிகரான விலையில் ஓர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

டிரையம்ப் (Triumph) நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் (Street Scrambler) பைக் மாடலே அது ஆகும். இது ஓர் 2021 வேரியண்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்று விதமான ரைடிங் மோட்கள், ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் பல்வேறு பிரீமியம் தர அம்சங்கள் உடன் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

எனவேதான் இதன் விலை பல மடங்கு உயர்வாக காணப்படுகின்றது. டிரையம்ப் நிறுவனம் 2021 ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்கிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 9.35 லட்ச ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை மேலும் கூடுதலாக காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

அறிமுகத்தை முன்னிட்டு தற்போது 2021 ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பைக் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டுகாட்டி ஸ்கிராம்பளர் ஐகான் மற்றும் கவாஸாகி இசட் 900 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்கிள் 900 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 65 பிஎஸ் பவரை 7,250 ஆர்பிஎம்மிலும், 80 என்எம் டார்க்கை 3,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

சாலை (Road), மழை (Rain) மற்றும் ஆஃப்-ரோடு (Off-Road) ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கங் சிஸ்டம் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

புதிய ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்கில் இயக்கத்தை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும் நோக்கில் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதற்கேற்ப 790மிமீ உயரத்திலான இருக்கை, அப்ரைட் சவாரி நிலை, அகலமான ஹேண்டில்-பார் மற்றும் பிரத்யேக சேஸிஸ் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

இவையனைத்தும் சேர்ந்து மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குகின்றன. குறிப்பாக, இதன் உயரம் மிகவும் சிறந்த இயக்க அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும் வகையில் இருக்கின்றது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. பைக்கில் 12 லிட்டர் எரிபொருளை சேமிக்கும் வகையில் எரிபொருள் தொட்டி, அனலாக் ஸ்பீடோ மீட்டர் வசதிக் கொண்ட எல்சிடி திரை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

மேலும், 2021 ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் பைக்கில் எல்இடி மின் விளக்கு, யுஎஸ்பி சார்ஜிங் வசதி, ட்ரிம் கம்ப்யூட்டர் மற்றும் சார்க் அசிஸ்ட் கிளட்ச் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, கார்ட்ரிட்ஜ் முன் பக்க ஃபோர்க், ஃபார்வோர்டு செட் ஃபூட் ஃபெக், 19 இன்ச் அளவுக் கொண்ட ஸ்போக் வீல்கள், முன்பக்கத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 255 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய எம்ஜி அஸ்டர் காருக்கு நிகரான விலையில் பைக்... Triumph Street Scrambler அறிமுகம்! இவ்ளோ அதிக விலையா?

இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளை 2021 ஸ்ட்ரீட் ஸ்கிாரம்ப்ளர் பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி காருக்கு நிகரான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பைக்கை மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஜெட் பிளாக், அர்பன் கிரே மற்றும் மேட் ஐயர்ன்ஸ்டோன் ஆகிய நிறங்களிலும், மேட் காக்கி எனப்படும் இரட்டை நிற தேர்விலும் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph launched 2021 street scrambler bike in india at rs 9 35 lakh
Story first published: Tuesday, October 12, 2021, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X