Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ட்ரையம்ப் ராக்கெட் 3 221 (Triumph Rocket 3 221) சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பு வசதி என்ன என்பது பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ட்ரையம்ப் (Triumph0, இந்தியாவில் இன்று (நவம்பர் 21) சில சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதில், ஒன்றாக நிறுவனம் அதன் ராக்கெட் 3 மாடலில் '211' (Rocket 3 221) எனும் சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இச்சிறப்பு பதிப்பு பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 20.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதைவிட கூடுதல் விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான தேர்வை போலவே இச்சிறப்பு பதிப்பும் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ஆர் மற்றும் ஜிடி என இரு விதமான தேர்வுகளில் ராக்கெட் 3 221 எடிசன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் ஆர் ட்ரிம்மே 20.80 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஜிடி ட்ரிம் ரூ. 21.40 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இது '221' பதிப்பு என்பதால் இந்த எண்ணுருக்கள் பைக்கின் பெட்ரோல் டேங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், சிறப்பு நிற அலங்காரமும் இந்த மோட்டார்சைக்கிளில் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் 221 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் என்பதனால் இந்த பைக்கிற்கு 221 என சிறப்பு பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளில் 2,500 சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 165 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இதன் எஞ்ஜின்கள் இயங்குகின்றது. இத்துடன், டார்க் அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் எஞ்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

வழக்கமான மாடலில் இருந்து இப்பைக் மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக சிவப்பு நிறம் அதன் ஹாப்பர் டேங்க் மற்றும் முன் பக்க மட்குவார்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மிக சிறந்த கான்ட்ராஸ்டான நிறமாக சஃப்பையர் கருப்பு நிறம் மட்குவார்டின் பிராக்கெட்டுகள், ஹெட்லைட் பவுல்கள், ஃப்ளையிங் ஸ்கிரீன், சைடு பேனல்கள், பின் பக்க பாடி ஒர்க் மற்றும் ரேடியேட்டர் கவுல்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

தொடர்ந்து, பைக்கின் இலகுவான எடைக்காக காஸ்ட் அலுமினியம், 20 ஸ்போக்குகள் கொண்ட வீல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளுக்கு என்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட டயர்கள் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த டயர்கள் அதிக மைலேஜ் மற்றும் அதிக க்ரிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ப்ரெம்போ எம்4.32 4 பிஸ்டன் மோனோபிளாக் காலிபர் மற்றும் 300 மிமீ டிஸ்க் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

தொடர்ந்து, முழு நிற டிஎஃப்டி திரை பன்முக தகவல்களைக் கொடுக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், மை டிரையம்ப் இணைப்பு சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த சாஃப்ட்வேர் ப்ளூடூத் இணைப்பு வாயிலாக செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Triumph Rocket 3 221 சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள் அறிமுகம்... தயவு செஞ்சு இதோட விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த மாதிரியான சிறப்பம்சங்களுடனேயே ட்ரையம்ப் ராக்கெட் 3 221 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலைதான் பல மடங்கு அதிகமாக இருப்பதாக பட்ஜெட் வாகன பிரியர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த விலையில் பட்ஜெட் விலைக் கொண்ட கார்களின் மூன்று யூனிட்டுகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா பஞ்ச் (ரூ. 5.49 லட்சம்), மாருதி சுசுகி செலிரியோ ரூ. 5 லட்சம் ஆகிய விலைகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் நடுநிலை வேரியண்டின் மூன்று யூனிட்டுகளை புதிய ராக்கெட்3 221 மோட்டார்சைக்கிளின் விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph launched rocket 3 221 special edition in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X