அறிமுகத்திற்கு தயாராக 6 ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகள்!! இந்தியா பக்கம் எத்தனை வரவிருக்கோ!

2021ஆம் ஆண்டிற்கான ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகளை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராக 6 ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகள்!! இந்தியா பக்கம் எத்தனை வரவிருக்கோ!

பொன்னேவில்லே வரிசையில் இணையவுள்ள பைக்குகளின் புதிய டீசர் வீடியோவினை ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் வீடியோவில் கூறப்பட்டுள்ளதன்படி இந்த புதிய பொன்னேவில்லே பைக்குகள் வருகிற பிப்ரவரி 23ல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த வீடியோவில் அப்கிரேட் செய்யப்பட்ட 6 மாடல்களை முழுவதுமாக பார்க்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்க முடிகிறது.

அறிமுகத்திற்கு தயாராக 6 ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகள்!! இந்தியா பக்கம் எத்தனை வரவிருக்கோ!

இந்த அப்கிரேட்களில் புதிய ஸ்டைலிங் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் அடங்கலாம். அதேபோல் புதிய கிராஃபிக்ஸ் உடன் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் புதிய பொன்னேவில்லே பைக்குகளில் ட்ரையம்ப் நிறுவனம் வழங்கியிருக்கலாம்.

அறிமுகத்திற்கு தயாராக 6 ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகள்!! இந்தியா பக்கம் எத்தனை வரவிருக்கோ!

மற்றப்படி என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இந்த டீசர் வீடியோவில் இந்த புதிய பைக்குகள் ட்ரையம்ப் பொன்னேவில்லே குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியாக கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராக 6 ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகள்!! இந்தியா பக்கம் எத்தனை வரவிருக்கோ!

இதனால் பைக்குகளின் என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக தயாரிப்பு நிறுவனம் மேம்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. இந்த ஆறு பொன்னேவில்லே பைக்குகளில், ட்ரையம்ப் ஸ்ட்ரீட் இரட்டை, பொன்னேவில்லே டி100, பொன்னேவில்லே டி120, ஸ்பீடு இரட்டை, பொன்னேவில்லே ஸ்பீடுமாஸ்டர் மற்றும் பொன்னேவில்லே பாப்பர் உள்ளிட்டவை அடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகத்திற்கு தயாராக 6 ட்ரையம்ப் பொன்னேவில்லே பைக்குகள்!! இந்தியா பக்கம் எத்தனை வரவிருக்கோ!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் நம் நாட்டிலும் பொன்னேவில்லே பைக்குகளின் வரிசையை ட்ரையம்ப் நிறுவனம் திருத்தியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எந்தெந்த பொன்னேவில்லே பைக்குகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளன, இவற்றில் எந்த மாதிரியான அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் ரகசியமாகவே உள்ளது.

Most Read Articles

English summary
2021 Triumph Bonneville Range Announced
Story first published: Wednesday, February 10, 2021, 23:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X