டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்ப் அதன் புதிய ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை 221 ராக்கெட் 3 ஆர், 221 ராக்கெட் 3 ஜிடி, த்ரக்ஸ்டன் ஆர்எஸ் டன் அப் எடிசன் மற்றும் ஸ்ட்ரீட் ட்வின் இசி1 என்கிற பெயர்களில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடுகையில் இந்த நான்கு ஸ்பெஷல் எடிசன்களும் இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் பெற்றுவரவில்லை. தோற்றத்தில், அதாவது காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே இவை நான்கிலும் கொண்டுவரப்பட்டுள்ளன.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

இதில் 221 ராக்கெட் 3 ஆர் மற்றும் 221 ராக்கெட் 3 ஜிடி ஸ்பெஷல் எடிசன்கள் உலகளவில் பிரபலமான ராக்கெட் 3 பைக்கின் 221 என்எம் என்கிற இமாலய என்ஜின் டார்க் திறனை கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆர் & ஜிடி என்ற இரு விதமான உடல் அமைப்புகளில் ராக்கெட் 3 பைக்கின் இந்த ஸ்பெஷல் எடிசன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

ட்ரையம்ப் ராக்கெட் 3 மாடலின் இந்த 221 ஸ்பெஷல் எடிசன்கள் நேர்த்தியாக சிவப்பு ஹூப்பர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்த பைக்குகளின் பெட்ரோல் டேங்க் மற்றும் முன்பக்க மட்கார்ட் உள்ளிட்டவை சிவப்பு நிறத்தை பெற்றுள்ளன. இவை தவிர்த்த பைக்கின் பின்பகுதி, ஹெட்லைட் கௌல், ஃப்ளை ஸ்க்ரீன், ரேடியேட்டர் கௌல்கள் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் போன்றவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

அதேநேரம் இவை ஸ்பெஷல் எடிசன்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் பைக்கின் வெவ்வேறான பாகங்களில் '221' என்கிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. உலகின் எந்தவொரு தயாரிப்பு பைக்கிலும் இல்லாத வகையில், ராக்கெட் 3 மோட்டார்சைக்கிளில் அளவில் பெரிய 2.45 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

அதிகப்பட்சமாக 164 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்படுகிறது. இவை இயக்க ஆற்றலை பைக்கின் பின் சக்கரத்திற்கு வழங்குகின்றன. த்ரக்ஸ்டன் ஆர்எஸ் டன் அப் எடிசன் ஆனது 1960களில் முதன்முறையாக அறிமுகமான ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் பைக்கின் பெருமையை நினைவுக்கூறும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

மனித தீவு டிடி சுற்றின் லேப்-ஐ மணிக்கு 100 மைல்கள் (161kmph) வேகத்தில் நிறைவு செய்த முதல் மோட்டார்சைக்கிள் த்ரக்ஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் த்ரக்ஸ்டன் ஆர்எஸ் டன் அப் எடிசனில் பெட்ரோல் டேங்க் பகுதியில் நீல நிறமும், பின்பக்க கௌல் மற்றும் முன்பக்க மட்கார்ட் பகுதிகளில் வெள்ளை நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

இதில் பின்பக்க வெள்ளை நிற கௌலில், சிவப்பு நிறத்தில் '100 ஸ்பெஷல் எடிசன்' என்கிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. த்ரக்ஸ்டன் ஆர்எஸ் டன் அப் எடிசனில் ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் ஆர்எஸ் மாடலின் வழக்கமான 1,200சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 103.5 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

நான்காவது மற்றும் இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள கடைசி ஸ்பெஷல் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள், பொன்னெவில்லே ஸ்ட்ரீட் ட்வின் இசி1 ஆகும். கிழக்கு இலண்டன் பகுதி மக்களிடையே உள்ள கஸ்டம்-கிளாசிக் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தும் பழக்கத்தை நினைவுப்படுத்தும் விதமாக பொன்னேவில்லே ஸ்ட்ரீட் ட்வின் இசி1 வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

இசி1 என்பது கிழக்கு இலண்டனில் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் எண் ஆகும். பொன்னேவில்லே ஸ்ட்ரீட் ட்வின் இசி1 பைக்கிற்கு மேட் அலுமினியம் சில்வர் மற்றும் மேட் சில்வர் என்ற இரு பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 'இசி1' கிராஃபிக்ஸை பைக்கின் பல்வேறு பாகங்களில் பார்க்க முடிகிறது.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

பொன்னேவில்லே ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் வழக்கமாக பொருத்தப்படும் அதே 900சிசி, 270-டிகிரி, இணையான-இரட்டை என்ஜின் தான் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 64 பிஎச்பி மற்றும் 80 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் மட்டுமின்றி பைக்கின் மற்ற இயந்திர பாகங்களும் இந்த ஸ்பெஷல் எடிசனில் மாற்றப்படவில்லை.

டிரையம்ப்பின் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் வெளியீடு!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கு!

இந்த விபரங்களை தவிர்த்து இந்த 4 ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை தற்போதைக்கு டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிடவில்லை. இவை நான்கும் அடுத்த 12 மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இவற்றில் எத்தனை ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph Reveals Four New Special Edition Motorcycles.
Story first published: Monday, November 15, 2021, 22:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X