Just In
- 15 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 17 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 54 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரையம்ப் ராக்கெட் 3 பைக்கில் இரு ஸ்பெஷல் எடிசன்கள்!! இந்திய ஷோரூம்களுக்கு வர வாய்ப்பிருக்கா?
உலகளவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ட்ரையம்ப் ராக்கெட் 3ஆர் ப்ளாக் மற்றும் ராக்கெட் 3ஜிடி ட்ரிபிள் ப்ளாக் லிமிடெட் எடிசன் பைக்குகளை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 1,000 யூனிட்கள் மட்டுமே உலகளவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த ட்ரையம்ப் லிமிடெட் எடிசன் பைக்குகள் வாகன அடையாள எண் உடன் நம்பத்தன்மைக்கான சான்றிதழை விரைவில் பெறவுள்ளன.

பெயருக்கு ஏற்றாற்போல் ட்ரையம்ப் ராக்கெட் 3ஆர் ப்ளாக் முழுவதும் கருப்பு நிறத்திலும், ராக்கெட் 3ஜிடி ட்ரிபிள் ப்ளாக் மூன்று விதமான கருப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன. ஆனால் இவை இரண்டிலும் ஒரே விதமான 2,500சிசி ட்ரிபிள் என்ஜின் தான் பொருத்தப்படவுள்ளது.

அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 167 பிஎஸ் மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 221 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் ராக்கெட் 3ஆர் பைக்கில் 0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 2.27 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

இந்த லிமிடெட் எடிசன்களில் பைக்கின் மற்ற பாகங்கள் உள்பட என்ஜின் அமைப்பும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இவற்றில் அதிக செயல்திறன்மிக்க 6-ஸ்பீடு ஹெலிகல்-கட் கியர்பாக்ஸ் மற்றும் "டார்க் உதவி" ஹைட்ராலிக் க்ளட்ச் வழங்கப்படுகிறது.

எடைகுறைவான அலுமினியம் ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசன் மாடல்களில் பின்பக்கத்தில் பிக்கி நீர்த்தேக்கத்துடன் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷோவா மோனோஷாக் ரோலர் சஸ்பென்ஷன் யூனிட் போன்ற அதிநவீன பாகங்களை ட்ரையம்ப் நிறுவனம் வழங்கியுள்ளது.

முன்பக்கத்தில் சஸ்பென்ஷன் யூனிட்கள் அழுத்தம் மற்றும் ரீபாண்ட் டேம்பிங்கின் போது அட்ஜெஸ்ட் ஆகக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த ஸ்பெஷல் ப்ளாக் எடிசன் பைக்குகள் கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல், எல்இடி விளக்குகள், சறுக்கலை தவிர்ப்பதற்கான கண்ட்ரோல் & க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் பெற்றுள்ளன.

சாலை, மழை, ஸ்போர்ட் மற்றும் ஓட்டுனரே தனக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து கொள்ளக்கூடியது என நான்கு விதமான ரைடிங் மோட்கள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குகளில் டிஎஃப்டி திரை ஆனது வழக்கம்போல் மை ட்ரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமில்லாமல் சாவியில்லா ஸ்டார்ட் மற்றும் சாவியில்லா ஸ்டேரிங் லாக் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் துளைகளையும் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளில் ட்ரையம்ப் நிறுவனம் வழங்கியுள்ளது. அதேநேரம் ராக்கெட் 3ஜிடி பைக்கிற்கு மட்டும் ஹீட்டட் ஹேண்டில்பார் க்ரிப்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் சில வெளிநாட்டு ஷோரூம்களில் விற்பனையை துவங்கவுள்ள ட்ரையம்ப் ராக்கெட் 3ஆர் ப்ளாக் & ராக்கெட் 3ஜிடி ட்ரிபிள் ப்ளாக் லிமிடெட் எடிசன் பைக்குகள் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நேரம் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.