ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

ட்ரையம்ப் ஸ்க்ரம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்குயின் மற்றும் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் 900 சாண்ட் ஸ்ட்ரோம் (மணற்புயல்) எடிசன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த ட்ரையம்ப் லிமிடெட் எடிசன் மோட்டார்சைக்கிள்களில் ஸ்க்ரம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்குயின் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.75 லட்சமாகவும், ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் 900 சாண்ட்ஸ்ட்ரோம் எடிசனின் விலை ரூ.9.65 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

ஏற்கனவே கூறியதுபோல் இவை இரண்டும் வெறும் தலா 25 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஸ்க்ரம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்குயின் எடிசனை பொறுத்தவரையில், இந்த எடிசனிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீவ் மெக்குயினின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மட்டுமின்றி ஸ்டீவ் மெக்குயின், ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

ட்ரையம்ப் ஸ்க்ரம்ப்ளர் 1200 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் இது. ட்ரையம்ப்பின் விலையுயர்ந்த பைக்குகளுள் ஒன்றான ஸ்க்ரம்ப்ளர் 1200-இன் எக்ஸ்இ வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டீவ் மெக்குயின் எடிசன் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுபடுவதற்காக சில காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றுள்ளது.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

இதில் பச்சை நிற பெட்ரோல் டேங்க், தங்க நிற முன்பக்க ஃபோர்க்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. கோல்டு நிறத்தை பைக்கின் மற்ற சில பாகங்களிலும் பார்க்க முடிகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் ரேடியேட்டர் பாதுகாப்பான் மற்றும் மோதல் பாதுகாப்பானையும் பெற்றுள்ளது.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

இது ஸ்பெஷல் எடிசன் பைக் என்பதை காட்டும் லோகோக்கள் வாகனத்தின் ஹேண்டில்பாரிலும், பெட்ரோல் டேங்கிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்க்ரம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்குயின் எடிசனில் லிக்யுடு-கூல்டு, எஸ்ஒஎச்சி, இணையான-இரட்டை, 1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

அதிகப்பட்சமாக 7250 ஆர்பிஎம்-இல் 89 பிஎச்பி மற்றும் 4500 ஆர்பிஎம்-இல் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சரி ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் 900 சாண்ட்ஸ்ட்ரோம் எடிசனின் பக்கம் வருவோம்.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

இந்த ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிளும் பஜா பென்னின்சுலா என்பவருக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், சில மறக்க முடியாத ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களின் பயணங்களை நினைவுக்கூறும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

தற்போதைய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாண்ட்ஸ்ட்ரோம் எடிசன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களினால் முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றுள்ளது. இதில் முக்கியமானது என்று பார்த்தால், மேட் ஸ்ட்ரோம் க்ரே & அயர்ன் ஸ்டோன் பெயிண்ட்டை சொல்ல வேண்டும்.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

இத்தகைய பெயிண்ட் உடன் சற்று நீளம் அதிமாக்கப்பட்ட முன்பக்க மட்கார்ட், அளவு குறைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட் & நம்பர் தட்டிற்கான விளக்கு, அலுமினியம் சம்ப் பாதுகாப்பான், ஹெட்லைட் க்ரில் மற்றும் ஓட்டுனரின் கால்முட்டியை பாதுகாக்க ரப்பர் உள்ளிட்டவற்றை இந்த லிமிடெட் எடிசன் பைக் பெற்றுள்ளது.

ட்ரையம்ப்பின் இரு ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! விலையை பார்த்தா வாங்கும் ஆசையே போயிரும்...

இந்த ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் 900 சாண்ட்ஸ்ட்ரோம் எடிசனில் லிக்யுடு-கூல்டு, எஸ்ஒஎச்சி, இணையான-இரட்டை, 900சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7250 ஆர்பிஎம்-இல் 64.1 பிஎச்பி மற்றும் 3250 ஆர்பிஎம்-இல் 80 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Triumph Motorcycles has launched the Scrambler 1200 Steve McQueen and the Street Scrambler 900 Sandstorm special edition motorcycles in India. Both are limited edition motorcycles launched by the brand in the country.
Story first published: Thursday, May 20, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X