புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் யுகே நிறுவனம் வரும் ஜனவரி 26ஆம் தேதி புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்களை படங்களுடன் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக்கின் இந்த உலகளாவிய அறிமுகத்திற்கான அறிவிப்புடன் குறும்வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பைக்கின் தோற்றம் எரியும் ஹெட்லைட்கள் உடன் நிழல் போன்று காட்டப்பட்டுள்ளது.

இந்த இரட்டை-ஹெட்லைட் அமைப்புதான் ட்ரையம்பின் மற்ற சிறிய ரக ஆர்எஸ் பைக்குகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்டைல் மற்றும் தோற்றத்திலும் சரி, என்ஜின் அமைப்பிலும் சரி புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் பைக் அனைத்தையும் பெரியதாகவே கொண்டிருக்கும்.

புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

குறிப்பாக என்ஜின் 1200சிசி என்பதால் இதுவரை எந்த ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளிலும் பார்த்திராத அளவிற்கு பெரியதாக இருக்கும். மேலும் இந்த வீடியோவில் பைக்கின் சத்தத்தையும் கேட்க முடிகிறது.

புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

மற்றப்படி இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய விபரத்தையும் ட்ரையம்ப் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. அவற்றை அறிய ஜனவரி 26ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் என்ஜின் யூரோ 5/ பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாகவே வழங்கப்படும்.

புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

2020ல் ட்ரையம்ப் பிராண்டில் இருந்து எந்த ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் வரிசை பைக்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதனால்தான் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

இந்திய சந்தையை பொறுத்தவரையில், இந்த யுகே இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக ட்ரைடென் 650 ரோட்ஸ்டர் பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது. ட்ரையம்பின் இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த 650சிசி பைக்குடன் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கையும் இந்த நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவருகிறது.

புதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்!! அறிமுக தேதி அறிவிப்பு!

ட்ரையம்ப்பின் விலை குறைவான டைகர் வரிசை மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் விற்பனையை துவங்கும் டைகர் 850 ஸ்போர்ட் பொது சாலை மற்றும் அட்வென்ச்சர் என இரு விதமான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக்கூடிய மோட்டார்சைக்கிளாகும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Triumph Speed Triple 1200 RS Teased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X