1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

2022 டைகர் 1200 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை இந்தியாவில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த 2022 டிரையம்ப் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

க்ரூஸர் ரக பைக்குகளில் இருந்து உலகளவிலான வாடிக்கையாளர்களின் இரசனை மெல்ல மெல்ல எந்தவொரு சாலைக்கும் எடுத்து செல்லக்கூடிய அட்வென்ச்சர் பைக்குகளின் பக்கம் திரும்புவதை உணர்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களையும் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு ஸ்விட்ச் செய்து வருகின்றன.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

அதேபோல் விற்பனையில் இருக்கும் அட்வென்ச்சர் பைக்குகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் அவற்றிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்கிரேட்களை வழங்கவும் தயாரிப்பு நிறுவனங்கள் மறப்பதில்லை. இந்த வகையில் முற்றிலும் அப்டேட் செய்யப்பட்ட டைகர் 1200 மோட்டார்சைக்கிளை டிரையம்ப் நிறுவனம் முன்னதாக இந்த 2021 டிசம்பர் மாத துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்தது.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

அதனை தொடர்ந்து தற்போது 2022 டிரையம்ப் டைகர் 1200 பைக்கிற்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. ஜிடி & ராலி என்கிற இரு விதமான வேரியண்ட்களில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை டைகர் 1200 பைக் புதியதாக உருவாக்கப்பட்ட எடை குறைவான சேசிஸின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

இதன் மூலமாக மூன்று-பிணைப்பு ஸ்விங்கார்ம் மற்றும் ஷாஃப்ட் ட்ரைவ்-ஐ இந்த அட்வென்ச்சர் டிரையம்ப் பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் ஜிடி வேரியண்ட்டில் ஜிடி, ஜிடி பிரோ & ஜிடி எக்ஸ்ப்ளோரர் என்கிற 3 மாடல்களும், ராலி வேரியண்ட்டில் ராலி பிரோ மற்றும் ராலி எக்ஸ்ப்ளோரர் என்கிற 2 மாடல்களும் அடங்குகின்றன. ஆனால் இந்த மாடல்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக 1,160சிசி, இன்லைன் 3-சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 148 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 130 என்எம் டாட்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் அமைப்பானது டி-பிளேன் ஃபைரிங் ஆர்டரை கொண்டுள்ளது. என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் அதன் முந்தைய வெர்சனை காட்டிலும் 9 எச்பி மற்றும் 8 என்எம் டார்க் திறன் அதிகமாகும். இந்த 2022 அட்வென்ச்சர் பைக்கில் ஓட்டுனரின் இருக்கையின் உயரத்தையும் தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாமாம்.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

இவற்றுடன் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கும் பைக்கின் மொத்த எடையை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதற்கு முக்கிய பங்காற்றி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக டைகர் 1200 பைக்கின் எடை முந்தைய தலைமுறையை காட்டிலும் ஏறக்குறைய 25 கிலோ குறைந்துள்ளது. 2022 டைகர் 1200 பைக்கில் செமி-ஆக்டிவ் ஷோவா சஸ்பென்ஷன் அமைப்பை அனைத்து வேரியண்ட்களிலும் டிரையம்ப் வழங்கியுள்ளது.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

பிரேக்கிங் பணியை இந்த பைக்கில் முன் சக்கரத்தில் 320மிமீ இரட்டை மோட்டார்களும், பின்பக்கத்தில் சிங்கிள் டிஸ்க்கும் கவனித்து கொள்ள வழங்கப்பட்டுள்ளன. 2022 டைகர் 1200 பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக 7-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பல எண்ணிக்கைகளில் ரைடிங் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், டிபிஎம்எஸ் மற்றும் சாவியில்லா ஸ்டார்ட் அமைப்பு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

இவற்றுடன் இந்த பைக்கின் எக்ஸ்ப்ளோரர் மாடல்களில் ரேடார் உதவி அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த மாடல்கள், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி மற்றும் பாதையில் இருந்து மோட்டார்சைக்கிள் விலகுவதை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்றுள்ளன. உலகளாவிய வெளியீட்டின்போது 2022 டைகர் 1200 பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த எந்தவொரு தகவலையும் டிரையம்ப் தெரிவிக்கவில்லை.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கின் இந்திய அறிமுகத்தை அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கிறோம். தற்போது முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளதால், 2022 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இன்னும் சில நாட்களில் கூட அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகே இதன் டெலிவிரிகள் துவங்கும்.

1200சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கான புக்கிங்கை இந்தியாவில் துவங்கியது டிரையம்ப்!! மிக விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் விற்பனைக்கு பிறகு இந்த டிரையம்ப் அட்வென்ச்சர் பைக்கிற்கு பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் மாடல் நேரடி போட்டியாக விளங்கவுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கை காட்டிலும் 2022 டைகர் 1200 கிட்டத்தட்ட 17 கிலோ வரையில் குறைவான எடையினை கொண்டுள்ளது. ஆர்1250 ஜிஎஸ் பைக்கை போன்று இந்த டிரையம்ப் பைக்கும் இரு விதமான கொள்ளளவுகளில் பெட்ரோல் டேங்க் தேர்வுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph Tiger 1200 Booking Open.
Story first published: Saturday, December 25, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X