விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

என்டார்க் 125 ஸ்கூட்டருக்கு விலை இல்லா இஎம்ஐ திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர் மாடல்களில் என்டார்க் 125 மாடலும் ஒன்று. இந்த ஸ்கூட்டரையே நோ காஸ்ட் இஎம்ஐ திட்டத்தின்கீழ் (no-cost EMI scheme) விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, வாகனத்திற்கான தொகையை மட்டும் மாத தவணையாக செலுத்தும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

மூன்று மற்றும் ஆறு மாதங்களை இஎம்ஐ காலமாக தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு திட்டம் பொருந்தும் என்ற நிபந்தனையை டிவிஎஸ் முன் வைத்துள்ளது. இந்தியாவின் பிரபலமான 125 ஸ்கூட்டருக்கு இத்தகைய சிறப்பு ஆஃபரை அறிமுகம் செய்திருப்பது இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

அதேசேமயம், விலை இல்லாத இஎம்ஐ திட்டத்தை ஆன்லைன் வாயிலாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்க இருப்பதாகவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

சலுகைகுறித்த மேலும் விரிவான விபரங்களை அறிந்து கொள்ள விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்ளும்படி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நான்கு விதமான வேரியண்டுகளில் டிவிஎஸ் என்டார்க் விற்பனைக்குக் கிடைக்கின்றது. என்டார்க் 125 ட்ரம், என்டார்க் 125 டிஸ்க், என்டார்க் 125 ரேஸ் எடிசன் மற்றும் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

இதில், ட்ரம் பிரேக் தேர்விற்கு ரூ. 71,055 என்ற விலையையும், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 75,355 என்ற விலையையும், ரேஸ் எடிசன் தேர்விற்கு ரூ. 78,335 என்ற விலையையும், சூப்பர் ஸ்குவாட் எடிசன் ரூ. 81,035 என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

மேற்கூறிய அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 125 சிசி திறனில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக சிறப்பு கொண்ட ஸ்கூட்டராக டிவிஎஸ் என்டார்க் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

இது ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதிக் கொண்டது. இதில், மிக துள்ளியமான பாதை தகவலை வழங்கும் நேவிகேஷன் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த எஞ்ஜின் திறனுக்காக 124சிசி எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விலை இல்லா இஎம்ஐ திட்டம்... ஜூன் 15 வரை மட்டுமே... வாடிக்கையாளர்களை கவர டிவிஎஸ் அதிரடி...

அது 9.25 பிஎச்பி மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. டிவிஎஸ் என்டார்க் இந்தியாவில் ஹோண்டா கிரேஸியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125, யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Announced No Cost EMI Scheme For Ntorq 125 Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X