டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மோட்டார்சைக்கிளின் புதிய ஸ்பெஷல் எடிசனை ரூ.1.15 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அப்பாச்சி பைக்கை பற்றிய முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

தோற்றத்தில் கவனிக்கத்தக்க அளவிலான வேறுப்பாடுகளை பெற்று வந்துள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் இந்த ஸ்பெஷல் வெர்சனில் அதேநேரம் சில கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ரூ.1.15 லட்சம் என்பது இந்த புதிய அப்பாச்சி பைக்கின் ஆரம்ப விலையாகும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இந்த விலையில் பைக்கில் ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்படுமாம். அதிகப்பட்சமாக ரூ.1.21 லட்சத்தையும் விலையாக இந்த பைக் பெற்று வந்துள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கின் இந்த ஸ்பெஷல் எடிசன் மேட் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அலாய் சக்கரங்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இதற்கு ஏற்ப பயணிக்கான பின் இருக்கை சிவப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் டேங்க் பகுதியில் கிராஃபிக்ஸில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை பார்க்க முடிகிறது. இருக்கைகள் புதிய டிசைனில் தையலிடப்பட்டுள்ளன. ரேசிங் சிவப்பு, மெட்டாலிக் நீலம் மற்றும் க்னைட் ப்ளாக் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் இந்த ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி பைக்கை வாங்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய வசதிகளாக, புதிய டிஆர்எல் உடன் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர்; ஸ்போர்ட், நகர்புறம் & மழை என்ற மூன்று ரைடிங் மோட்கள்; டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் (SmartXonnect) மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்ரேக் & க்ளட்ச் லிவர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இந்த ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிளின் அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரி மேகாஷ்யம் டிகோல் கருத்து தெரிவிக்கையில், பந்தய ஆர்வலர்களுக்காக அதிநவீன தொழிற்நுட்பங்களை வழங்குவதன் மூலம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி வரிசை பைக்குகள் எப்போதும் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

மேலும் பேசிய இவர், பிரிவில்-முதல் அம்சங்களுடன், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி வரிசை மோட்டார்சைக்கிள்களின் மேம்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் டிவிஎஸ் அப்பாச்சி மோட்டார்சைக்கிள் வரிசையை பாராட்டும் விதமாக இந்த சிறப்பு பதிப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் என்றார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ.1,02,270 நிர்ணயிக்கப்பட்டது,. டிஸ்க் மற்றும் டிஸ்க்-அல்லாத என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த 160சிசி அப்பாச்சி பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இந்த புதிய அறிமுகத்திற்கு அடுத்த மாதத்திலேயே, அதாவது அடுத்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாருக்கு கை மேல் பலன் கிடைத்தது. 2020 ஏப்ரலில் 1,44,739 இருசக்கர வாகனங்களையே உலகளவில் விற்பனை செய்திருந்த டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2021 ஏப்ரல் சுமார் 123% அதிகமாக 3,26,683 2-வீலர்ஸை விற்பனை செய்திருந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இந்த மாபெரும் விற்பனை வளர்ச்சிக்கு 2021 அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக் மட்டுமே காரணம் இல்லை என்றாலும், விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததினாலேயே டிவிஎஸ் 2-வீலர்ஸின் விற்பனை குறைந்திருந்தது. ஏனெனில் டிவிஎஸ் மோட்டார் சராசரியாக ஒரு மாதத்தில் 2.5 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாகும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

இந்த புதிய ஸ்பெஷல் எடிசனின் அறிமுகத்தினால் 160சிசி அப்பாச்சி பைக்குகளின் விற்பனை மேலும் உயரும் என டிவிஎஸ் எதிர்பார்க்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் 159.7சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இதில் 4-வால்வு என்பதன் சுருக்கம் தான் 4வி ஆகும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1.15 லட்சம்

அதிகப்பட்சமாக 9250 ஆர்பிஎம்-இல் 17.63 பிஎஸ் மற்றும் 7250 ஆர்பிஎம்-இல் 14.73 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. விற்பனையில் இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்கிற்கு யமஹா எம்டி-15, பஜாஜ் பல்சர்150, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரைடர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company announces advanced TVS Apache RTR 160 4V series of motorcycles with TVS SmartXonnectTM, Headlamp with DRL and Three Ride Modes.
Story first published: Friday, October 8, 2021, 23:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X