டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் ஆர்டிஆர் 160 4வி பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இந்த இரு ஆர்டிஆர் பைக்குகளின் வேரியண்ட்கள் அனைத்தின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த டிவிஎஸ் பைக்குகளின் விலைகள் உயர்த்தப்படுவது இந்த வருடத்திலேயே இது இரண்டாவது முறையாகும்.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் இருந்து ஆரம்பிப்போம். டிஸ்க் & ட்ரம் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த பைக்கின் விலை வெறும் ரூ.45 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இந்த விலை அதிகரிப்பிற்கு பின், அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1,07,315 மற்றும் ரூ.1,10,365 என உள்ளன. அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை பார்த்தோமேயானால், இதன் 2021 அப்கிரேட் வெர்சன் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த 200சிசி அப்பாச்சி பைக்கின் விலைகள் ரூ.1,295 அதிகரிக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இதன் சிங்கிள்-சேனல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,29,315 ஆகவும், டாப் இரட்டை-சேனல் வேரியண்டின் விலை ரூ.1,34,365 ஆகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அதிகரித்து வரும் அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பாகங்களின் விலைகளினால் தங்களது விற்பனை வாகனங்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மேற்கொண்ட விலை அதிகரிப்பாக தான் இது இருக்க வேண்டும். அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை போன்று ஆர்டிஆர்160 4வி பைக்கும் சமீபத்தில் தான் அப்டேட் செய்யப்பட்டது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இதில் பொருத்தப்படுகின்ற 159.7சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 9250 ஆர்பிஎம்-இல் 17..5 பிஎச்பி மற்றும் 7250 ஆர்பிஎம்-இல் 14.73 டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. 2021 அப்கிரேடாக இந்த பைக்கின் என்ஜின் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இதனுடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இரட்டை நிறங்களில் இருக்கை உள்ளிட்டவையும் 2021 அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்டிஆர்200 4வி பைக்கிலும் குறிப்பிடத்தக்க அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு!! இந்த வருடத்திலேயே இது 2வது முறை...

இதன் மூலம் பிரிவிலேயே முதல் பைக்காக ரைடிங் மோட்கள், அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய சஸ்பென்ஷன் மற்றும் பிராண்டின் இணைப்பு தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றை 2021 அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக் பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs #tvs apache
English summary
TVS Apache RTR 160 4V & RTR 200 4V Prices Hiked Again This Year: Here Are The New Prices!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X