உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதியில் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டாருக்கு தமிழக்கத்தில் ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் இந்த நிறுவனம் தயாரிப்பு வாகனங்களை தயாரித்து வருகிறது.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

மேலும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களும் தயாரிக்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மூன்று-சக்கர வாகனங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

டிவிஎஸ் மோட்டார் ஏற்றுமதி செய்யும் வாகனங்களில் டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் எச்எல்எக்ஸ் சீரிஸ், டிவிஎஸ் ஸ்ட்ரைக்கர் சீரிஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

இவற்றுடன் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் வணிகத்தை விரிவுப்படுத்த டிவிஎஸ் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது சர்வதேச இரு-சக்கர வாகன விற்பனையில் 1,00,000 என்ற மைல்கல்லை இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்துள்ளது.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்ஷன் வேணு கருத்து தெரிவிக்கையில், இந்த மார்ச் மாதத்தில் எங்களது சர்வதேச இரு-சக்கர வாகன வர்த்தகம் 1,00,000 யூனிட்களின் விற்பனை மைல்கல்லை எட்டியதால் இது டிவிஎஸ் மோட்டாருக்கு முக்கியமான தருணமாகும்.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

எங்கள் தொழிற்துறை கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து இந்திய இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமாக்குவதில் தொடர்ந்து பங்கு வகிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம் என கூறினார்.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

மேலும் கூறிய அவர், எங்கள் கவர்ச்சிக்கரமான தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க முற்படுகையில், இதே சூழலை முன்னோக்கி வைக்க முயற்சிப்போம். வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் அடுத்த கட்டத்தில் தொழில்நுட்பத்தில் முதலீடுகள் மற்றும் எதிர்கால இயக்கம் நமக்கு முக்கியமானதாக இருக்கும் என்றார்.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

டிவிஎஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் மிகவும் அட்வான்ஸான தொழிற்சாலைக்கு நகரவுள்ளதாக கடந்த ஜனவரி மாதத்தில் அறிவித்திருந்தது.

உலகளவில் விற்பனையில் மாஸ் காட்டி வரும் தமிழக டிவிஎஸ் நிறுவனம்!! 1 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனையாம்...

இங்கிலாந்தில் சோலிஹுல் பகுதியில் நார்டனின் புதிய தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய தொழிற்சாலை இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் திறக்கப்படலாம் என டிவிஎஸ் மோட்டாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company, a reputed two-wheeler and three-wheeler manufacturer, today announced that its two-wheeler exports clocked 100,000 units in March 2021. An increase in motorcycle sales in key markets across the globe has significantly contributed to this achievement.
Story first published: Wednesday, March 31, 2021, 22:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X