அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.3 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த விபரங்களை அட்டவணையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

2021ன் முதல் வாரத்தில் ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்பீல்டு, கேடிஎம் மற்றும் ஹோண்டா என இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் தயாரிப்புகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளன.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

இந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் அப்பாச்சி பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி வரிசையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் அடங்குகின்றன.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

இவற்றில் குறைந்தப்பட்சமாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்குகளின் விலைகள் ரூ.1,520 குறைக்கப்பட்டுள்ளன. ட்ரம் & டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் இனி ரூ.1,02,070 மற்றும் ரூ.1,05,070 ஆகும்.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் 4வி ட்ரம் மற்றும் 4வி டிஸ்க் வெர்சனில் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முன்பு ரூ.1,05,500 மற்றும் ரூ.1,08,550ஆக இருந்தன. தற்போது இந்த விலைகளில் தலா ரூ.1,770 அதிகரிக்கப்பட்டுள்ளன.

Apache Model

New Price Old Price Difference
RTR 160 Drum ₹1,02,070 ₹1,00,550 ₹1,520
RTR 160 Disc ₹1,05,070 ₹1,03,550 ₹1,520
RTR 180 ₹1,08,270 ₹1,06,500 ₹1,770
RTR 160 4V Drum ₹1,07,270 ₹1,05,500 ₹1,770
RTR 160 4V Disc ₹1,10,320 ₹1,08,550 ₹1,770
RTR 200 4V Single ₹1,27,020 ₹1,25,000 ₹2,020
RTR 200 4V Dual-Channel ₹1,33,070 ₹1,31,050 ₹2,020
RR 310 ₹2,48,000 ₹2,45,000 ₹3,000
அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் விலையிலும் ரூ.1,770 உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் முன்பு ரூ.1,06,500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த பைக்கின் விலை இனி ரூ.1,08,270 ஆகும்.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2,020 அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆர்டிஆர் 200 4வி பைக் சிங்கிள் & ட்யுல்-சேனல் ஏபிஎஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முன்பு ரூ.1,25,000 மற்றும் ரூ.1,31,050 ஆக இருந்தன.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

ஆனால் தற்போது விலை அதிகரிப்பினால் இந்த விலைகள் ரூ.1,27,020 மற்றும் ரூ.1,33,070 ஆக உயர்ந்துள்ளன. அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலை பிஎஸ்6 அப்கிரேட்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பிற்கு முன்பு வரையில் இதன் விலை ரூ.2.45 லட்சமாக இருந்தது.

அப்பாச்சி பைக் பிரியர்களுக்கு டிவிஎஸ் கொடுத்த ஷாக் நியுஸ்!! ஷோரூம் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு

தற்போது இந்த விலை ரூ.3,000 அதிகரிக்கப்பட்டு ரூ.2.48 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலை இன்னமும் கேடிஎம் ஆர்சி390 பைக்கின் விலையை காட்டிலும் குறைவுதான்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache Series Is Now Pricier
Story first published: Saturday, January 9, 2021, 22:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X