Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமுக்காக விலையை உயர்த்திய டிவிஎஸ்... கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்கு இணையான விலையை பெறும் பிரபல டிவிஎஸ் பைக்...
தனது பிரபல இருசக்கர வாகனத்தின் விலையை டிவிஎஸ் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விலையுயர்வைப் பெற்றிருக்கும் அந்த பைக் கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 390 மாடலுக்கு இணையான விலையை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த பைக்கின் விலையை மிகவும் சைலண்டாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் அப்பாச்சி மாடல் பைக்கும் ஒன்று. இந்த பிராண்ட் பெயரில் பல்வேறு தேர்வுகளை நிறுவனம் வழங்கி வருகின்றது. அந்தவகையில், அப்பாச்சி பிராண்ட் பெயரில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் மாடல்களில் ஆர்ஆர்310-ம் ஓர் மாடலாகும்.

vஇந்த மாடலின் விலையையே நிறுவனம் தற்போது அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. ரூ. 1,990 வரை விலையை டிவிஎஸ் உயர்த்தியிருக்கின்றது. இந்த புதிய விலையால் பைக்கின் விலை ரூ. 2,49,990 ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த புதிய விலையுயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை. இதையே ஆட்டோதுறை உலகம் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் நிறுவனம் இப்பைக்கின் விலையை கடந்த 2021 ஜனவரியில்தான் உயர்த்தியிருந்தது. ரூ. 2.45 லட்சம் என்றிருந்த விலையை ரூ. 2.48 லட்சமாக உயர்த்தியது. இந்த நிலையிலேயே மீண்டும் ஓர் விலையுயர்வை டிவிஎஸ் செய்திருக்கின்றது. ரூ. 2.48 லட்சம் என்ற விலையிலேயே ரூ. 1,990 புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதனால் டிவிஎஸ் ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

மேலும், இந்த புதிய விலையுயர்வானது கேடிஎம் ஆர்சி 390க்கு இணையான மதிப்புடைய மோட்டார்சைக்கிளாக ஆர்ஆர்310 மாடலை மாற்றியிருக்கின்றது. கேடிஎம் ஆர்சி 390 பைக் இந்தியாவில் ரூ. 2.60 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்தது வருவது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனமாகும்.

இந்த பைக்கிற்கு இணையான ஓர் பைக்காகவே புதிய விலையால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மாறியிருக்கின்றது. இது ஆர்சி390 பைக்கைக் காட்டிலும் சற்று குறைந்த திறனையே வெளிப்படுத்தும். இப்பைக்கில், ஸ்போர்ட், அர்பன், டிராக் மற்றும் மழை ஆகிய நான்கு விதமான ரைடிங் மோட்களை டிவிஎஸ் வழங்கியிருக்கின்றன.

அந்தந்த மோட்கள் அதன் பெயருக்கேற்ற காலம் மற்றும் சூழ்நிலைகளில் இயங்கும் தன்மைக் கொண்டவை. இத்துடன், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகிய சிறப்பம்சங்களை சிறந்த பிரேக்கிங் திறனுக்காக டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது.

இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஓர் 310 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு ரிவர்ஸ்-இன்க்ளைண்ட் எஞ்ஜின் ஆகும். இதே திறன் கொண்ட எஞ்ஜினைதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 34 பிஎஸ் மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

தொடர்ந்து, 6 ஸ்பீடு ஸ்லிப்பர் க்ளட்ச் கியர்பாக்ஸ், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட 5.0 இன்சிலான டிஎஃப்டி வண்ணத் திரை என கூடுதல் பிரீமியம் தர அம்சங்களும் இப்பைக்கில் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய பைக்கின் விலையையே நிறுவனம் மிகவும் சைலண்டான முறையில் உயர்த்தியிருக்கின்றது.