பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

இந்தியாவில் பஜாஜ், டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் ஈடுப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நிறுவனங்களின் மற்ற வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதுபோல் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா முழுவதும் கிடைப்பதில்லை.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

ஏனெனில் இருசக்கர வாகனங்களுக்கான சந்தை இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் உள்ளது என்பதை ஆராய்ந்து அங்கு பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்கள் தங்களது இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புனேவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

ஃபேம் 2 திட்டத்தின் வழிக்காட்டுதலினால் டிவிஎஸ் ஐக்யூப் புனேவில் வெறும் ரூ.1,10,898 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவே புனேவில் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பஜாஜ் சேத்தக் & ஏத்தர் ஸ்கூட்டர்களின் விலைகள் ரூ.1.42 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட்ஸ் மோட்டார், லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் இணைக்கப்படுகிறது. இந்த பேட்டரிக்கு தயாரிப்பு நிறுவனம் 3 வருட/ 50 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு 75கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும் என்கிறது டிவிஎஸ். ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

எலக்ட்ரிக் வாகன விற்பனையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதால், புதிய புதியதாக எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உருவெடுத்து வருகின்றன. தொழிற்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக விளங்கும் அவற்றில் எது ஒன்றும், டிவிஎஸ், பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களை முந்திக்கொண்டு எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முதலிடத்திற்கு வரலாம் என்ற நிலையே நிலவுகிறது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

மேலும் இவற்றில் பெரும்பான்மையானவை இ-ஸ்கூட்டர்களை தயாரிப்பவையாக உள்ளன. டிவிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், நடப்பு நிதியாண்டில் இருசக்கர எலக்ட்ரிக் வாகனங்களுடன், அதன் மூன்று-சக்கர எலக்ட்ரிக் வாகனங்களையும் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

அதன் ஒரு பகுதியே தற்போது ஐக்யூப் புனேவில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது. மேலும் ஐக்யூப்-ஐ 20 இந்திய நகரங்களுக்கு கொண்டு செல்லவும் டிவிஎஸ் தயாராகி வருகிறது. பெங்களூர் மற்றும் டெல்லியை தொடர்ந்து தற்போது புனேவில் களமிறக்கப்பட்டுள்ள டிவிஎஸ் ஐக்யூப் விரைவில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பஜாஜ் சேத்தக்கிற்கு சவால் தயார்!! புனேவில் அறிமுகமானது டிவிஎஸ் ஐக்யூப், விலை ரொம்ப கம்மி!

இவ்வாறு நகரங்கள் நகரங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதின் மூலம் அந்த குறிப்பிட்ட நகரங்களில் அந்த இ-ஸ்கூட்டருக்கான சார்ஜிங் நிலையங்கள், அதற்கான கூட்டணியை ஏற்படுத்தி கொள்ளுதல் போன்றவற்றை தயாரிப்பு நிறுவனம் எளிதாக உருவாக்கி கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor launches iQube Electric at INR 1.11 Lakh in Pune.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X