ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

பிரபலமான ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கிற்கான புதிய நிறத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள நல்ல மைலேஜ் தரக்கூடிய மலிவான அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.63,495 ஆக உள்ளது.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

இது இதன் சிங்கிள்-டோனின் விலை ஆகும். இரட்டை-டோனில் இந்த டிவிஎஸ் பைக்கின் ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.63,995 ஆக உள்ளது. முன்பு இந்த பைக் 11 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் பச்சை நிறத்தை கொண்ட கார்கில் எடிசனும் ஒன்றாகும்.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

இந்த நிலையில் தற்போது 12வது நிறத்தேர்வாக பேர்ல் நீலம்-சில்வர் பெயிண்ட்டும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை வாடிக்கையாளர்கள் இனி இந்த நிறத்திலும் வாங்க முடியும்.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

இந்த புதிய ட்யுல்-டோன் நிறத்தேர்வை டிஸ்க் மற்றும் ட்ரம் என இரு விதமான ப்ரேக் தேர்விலும் வாங்கலாம். இந்த புதிய நிறத்தேர்வில் நீலம் மற்றும் சில்வர் கலந்த பெயிண்ட் பைக்கின் முன்பக்க ஹெட்லைட் கௌல், பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு & பின்பக்க பேனல்களில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பைக்கின் முன்பகுதியில் நீலம் நிறம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது, சில்வர் குறைவாக உள்ளது. ஆனால் போக போக பின்பகுதியில் சில்வர் நிறத்தின் ஆதிக்கமே உள்ளது.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

புதிய பெயிண்ட் தேர்வை தவிர்த்து பைக்கில் வழங்கப்படும் மற்ற இடி-எஃப்ஐ தொழிற்நுட்பம், எல்இடி ஹெட்லைட், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸில் 109.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,350 ஆர்பிம்-ல் 8.08 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

சஸ்பென்ஷன் அமைப்பாக பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் 5 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பொருத்தப்படுகின்றன.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை இனி இந்த நிறத்திலும் வாங்கலாம்!! சைலண்டாக அறிமுகப்படுத்தியுள்ள டிவிஎஸ்

ப்ரேக் பணியினை கவனிக்க ஏற்கனவே கூறியதுபோல் ட்ரம் மற்றும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படுகின்றன. 10 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை பெறும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கிற்கு ஹீரோ பேஷன் ப்ரோ, பஜாஜ் பிளாட்டினா 110, மற்றும் ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்குகள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Star City Plus Gets Pearl Blue Paint Option. Read In Tamil.
Story first published: Tuesday, March 30, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X