Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இனி இந்த ஊர்க்காரர்களுக்கும் ஐ-க்யூப் கிடைக்கப்போகுது...
டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதான் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். முதல் கட்டமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சூழலில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் உள்ளிட்ட டயர் 1 நகரங்களில் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்னும் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை.

அத்துடன் ஐசி இன்ஜின் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முதலில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனையை தொடங்குகின்றன. அதன் பின்னர்தான் மற்ற நகரங்களுக்கு படிப்படியாக விற்பனையை விரிவுபடுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.15 லட்ச ரூபாய் என்ற பெங்களூர் ஆன்-ரோடு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4 kW மின் மோட்டாரும், லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 75 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

அதே சமயம் இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிலோ மீட்டர்கள் ஆகும். இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதுடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றுள்ளது. இதில், ஈக்கோ மற்றும் பவர் ஆகிய ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரிவர்ஸ் கியர் வசதியும் உள்ளது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டி விடும். ஹை-ஸ்பீடு அலர்ட், ரேஞ்ச் இன்டிகேட்டர், நேவிகேஷன் ஆகியவற்றையும் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. அத்துடன் இதன் டிசைனும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிட்டு வருகிறது. எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப் க்ளஸ்ட்டர், கருப்பு நிற அலாய் வீல்கள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றையும் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

மூன்று பேட்டரிகளிடம் இருந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆற்றலை பெறுகிறது. இதில் ஒரு பேட்டரி ஃப்ளோர்போர்டுக்கு கீழேயும், மற்ற இரண்டு பேட்டரிகளும் இருக்கைக்கு அடியிலும் பொருத்தப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே 16 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இட வசதி வழங்கப்பட்டுள்ளது.