Honda Activa125, Yamaha Fascino125 ஸ்கூட்டர்களின் கதை காலி... வேற லெவலில் வந்திருக்கிறது Jupiter 125!

இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125)-ம் ஒன்று. இந்த ஸ்கூட்டரை நிறுவனம் எக்கசக்க புதிய வசதிகளுடன் உருவாக்கி உள்ளது. இதனை நாங்கள் அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு ஸ்கூட்டர் இடம் இருந்து கிடைத்த அனுபவங்களையும், அது பற்றி தெரிய வந்த சுவாரஷ்யங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை கீழே வழங்கியுள்ளோம், வாருங்கள் பார்க்கலாம்.

புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானதை முன்னிட்டு நிறுவனம் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணியைத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 73,400 என்ற ஆரம்ப விலையில் இருந்து இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிவிஎஸ் ஜூபிடர்

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் கேஸ் சார்ஜட் மோனோஷாக் போன்ற பிரத்யேக சிறப்பம்சங்களுடன் ஜூபிடர் 125 விற்பனக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இரு ஹெல்மெட்டை வைத்து கொள்ளும் ஸ்டோரேஜ் வசதி, எரிபொருளை நிரப்புவதற்கான வாய் பகுதி முன்பக்கத்தில் இடம் பெற்றிருப்பது என பல்வேறு மாற்றங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது. இது ஹோண்டா ஆக்டிவா 125, சுசுகி அக்செஸ் 125, யமஹா ஃபஸ்ஸினோ 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs jupiter 125 review video in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X