ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் எக்ஸ்எல்100 பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் வின்னர் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய எடிசனில் வழங்கப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

டிவிஎஸ் எக்ஸ்எல்100, அதிக சுமைகளை சுமக்க வேண்டிவரும் கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்ற இருசக்கர வாகனமாக விளங்குகிறது. இதனாலேயே இந்த டிவிஎஸ் தயாரிப்பிற்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம்.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

எக்ஸ்எல்100-இன் கம்ஃபர்ட் வேரியண்ட் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதன் ஹெவி ட்யூட்டி வேரியண்ட் புதிய வின்னர் எடிசனை ஏற்றுள்ளது. இதற்கு,எக்ஸ்எல்100 ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட் வின்னர் எடிசன் என பெயர் வைத்துள்ளனர்.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

மேலும் இந்த புதிய எக்ஸ்எல்100 பைக்கை சாலையில் தனித்து தெரிவதற்காக பிரத்யேகமான நேவி ப்ளூ நிறத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த புதிய நிறத்துடன் பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றுவதற்காக க்ரோம் பூச்சுகளை பைக் முழுவதும் டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இதன்படி எக்ஸாஸ்ட் குழாயின் மீது பொருத்தப்படும் தகடு, வட்ட வடிவிலான பின்பக்கம் பார்க்க உதவும் கண்ணாடிகளின் பின்புறம் உள்ளிட்டவற்றில் க்ரோம் தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. கால் வைக்கும் பகுதி உலோகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

பிளவுப்பட்ட இருக்கைகள் பழுப்பு- வெள்ளை என ட்யுல்-டோன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது ஹெவி ட்யூட்டி வேரியண்ட் என்பதால் பின் இருக்கையை வாடிக்கையாளர் தேவை என்றால் நீக்கியும் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், மற்ற அன்றாட பயன்பாட்டு வாகனங்களை போல் இந்த கமர்ஷியல் பயன்பாட்டு மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பிலும் டிவிஎஸ் நிறுவனம் மிகவும் உன்னிப்பாக செயல்பட்டுள்ளது.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இதனால் விலை அதிகரிக்கப்பட்டிருக்கும் என்ற கவலை வேண்டும். ஏனெனில் வழக்கமான எக்ஸ்எல்100 ஹெவி ட்யூட்டி பைக்கின் விலையை காட்டிலும் வெறும் ரூ.1,610 மட்டுமே அதிகமாக ரூ.49,599ல் புதிய எக்ஸ்எல்100 வின்னர் எடிசனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ஸ்பெஷல் எடிசனிலும் அதே 99.7சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின்தான் தொடரப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்தில் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4.35பிஎஸ் மற்றும் 6.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS XL100 Winner Edition Launched
Story first published: Tuesday, January 19, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X