TVS Jupiter125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

அட்டகாசமான வசதிகள் மற்றும் மாற்றங்களுடன் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் அதன் புதியி ஜூபிடர் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 மூன்று விதமான வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

ஷீட் மெட்டல் (sheet-metal), ட்ரம் அலாய் (drum-alloy) மற்றும் டிஸ்க் பிரேக் (disc) ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளிலேயே புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதில், ஷீட் மெட்டல் தேர்விற்கு ரூ. 73,400 என்ற விலையும், ட்ரம் அலாய் தேர்விற்கு ரூ. 76,800 என்ற விலையும், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 81,300 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

இப்புதிய 125 சிசி எஞ்ஜின் கொண்ட ஜூபிடர் ஏற்கனவே 125சிசி பிரிவில் விற்பனையில் இருக்கும் என்டார்க்125 ஸ்கூட்டருடன் இணைந்திருக்கின்றது. பொதுவாக, ஜூபிடர் ஸ்கூட்டரை குடும்பத்திற்கான ஸ்கூட்டர் என்று அழைப்பதுண்டு. இந்த ஸ்கூட்டர் குறைவான விலையில் சிறப்பு வசதிகளை வழங்கும் ஓர் வாகனமாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

இந்த ஸ்கூட்டரில் புதிய அம்சங்களாக எல்இடி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டருக்கு கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், முன் பக்க ஏப்ரானிலேயே இணைந்தவாறு இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது, ஸ்கூட்டருக்கு லேசான கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

முன்பக்கத்தைப் போலவே பின் பக்கத்திலும் எல்இடி மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இது வழக்கமான ஜூபிடரில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமானதாக இருக்கின்றது. தொடர்ந்து, இன்னும் பல அம்சங்களுடன் புதிய ஜூபிடர் 125 காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இதன் டிஸ்க் பிரேக் வேரியண்டில் குரோம் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

முன்பக்க ஏப்ரான், ஹெட்லேம்ப், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் வெளியேற்றும் குழாயின் மஃப்ளர் ஆகியவற்றில் இந்த குரோம் பூச்சை காண முடிகின்றது. ஸ்கூட்டரின் பாடி பேனல் உலோகத்தாலானது. இதனை மூன்று விதமான நிற தேர்வுகளில் டிவிஎஸ் வழங்க இருக்கின்றது. ஆரஞ்சு, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களில் புதிய 125 சிசி ஜூபிடர் விற்பனைக்குக் கிடைக்கும்.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் இடம் பெற்றும் மாற்றங்கள்:

எரிபொருள் நிரப்பும் ஃபில்லர் லிட் தற்பு முன் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கின்றது. மேலும், எரிபொருள் நிரப்பும் தொட்டியின் இடமும் மாற்றப்பட்டிருக்கின்றது. அது ஃப்ளூர் போர்டிற்கு கீழே இடம் பிடித்திருக்கின்றது. 60:40 எடை பகிர்மானத்தை உறுதிப்படுத்தம் நோக்கில் இந்த மாற்றத்தை டிவிஎஸ் நிறுவனம் செய்திருக்கின்றது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

மேலும், இருக்கைக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜை அதிகப்படுத்தும் நோக்கிலும் இந்த மாற்றத்தை நிறுவனம் செய்திருக்கின்றது. எரிபொருள் தொட்டி இருக்கம் இடம் மாற்றப்பட்டிருப்பதால் தற்போது 32 லிட்டர் ஸ்டோரேஜ் அளவு உயர்ந்துள்ளது. ஆமாங்க, இப்போ ரெண்டு ஹெல்மெட்டை கூட தாராளமாக வச்சுக்கலாம். மேலும், எரிபொருள் தொட்டியின் இடம் மாற்றப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இதன் ஃப்ளூர்போர்ட் சற்று கூடுதல் அகலமானதாகவும், அதிக உறுதியானதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

அதேவேலையில், அதிக எடையைத் தாங்கக் கூடியதாகவும் அது உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே புதிய 125சிசி ஜூபிடர் ஸ்கூட்டரில் செய்யப்பட்டிருக்கும் மிக முக்கியமான மாற்றமாகக் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, கூடுதல் சிறப்பு அம்சமாக டிஜிட்டல் திரையுடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆல்-இன்-ஒன் இக்னிஷன் வசதி, டிவிஎஸ் இன்டெல்லிகோ ஆட்டா ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி, ஒன் டச் ஸ்டார்ட் வசதி, காம்பி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் 124.8 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.18 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 10.5 என்எம் டார்க்கை 4,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

இந்த மோட்டாரில் சிவிடி கருவி பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்கா டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஸ்கூட்டரின் முன் பக்கத்திலும், கேஸ் சார்ஜட் மோனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் கேஸ் சார்ஜட் மோனோஷாக் சஸ்பென்ஷனை நிறுவனம் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

இத்துடன், டிஸ்க் மற்றும் டிரம் என இரு விதமான பிரேக்கிங் வசதியையும் இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் வழங்குகின்றது. இதில், டிஸ்க் பிரேக் அல்லாத ஜூபிடர் குறைந்த விலை தேர்வாக விற்பனைக்குக் கிடைக்கும். இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடனேயே ஜூபிடர் 125 தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

TVS Jupiter 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... Honda Activa 125 நிச்சயம் காலியாயிடும் போலிருக்கே!

இதன் அறிமுகத்தை முன்னிட்டு தற்போது புக்கிங் பணியை டிவிஎஸ் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக புக்கிங்குகளை நிறுவனம் ஏற்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 125, சுசுகி அக்செஸ் 125, யமஹா ஃபஸ்ஸினோ 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs launches all new jupiter 125 in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X