டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு!

ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகில் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த பைக் பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, இந்திய இருசக்கர வாகன சந்தையையும், நடப்பு 2021ம் ஆண்டின் இறுதி காலத்தையும் அலங்கரிக்கும் வகையில் ஓர் புதுமுக மோட்டார்சைக்கிளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி எனும் புதிய பைக்கையே நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் (Race Performance) நிறுவனத்தின் சிறப்பு வாகன தயாரிப்பு வரிசையின்கீழ் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இப்பைக்கிற்கு ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

இதுவே ரேஸ் பெர்ஃபார்மன்ஸ் பிரிவின் சிறப்பு வசதியாகும். இந்த பிரிவின் கீழ் புதிய பைக் உருவாக்கப்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே ஆர்பி எனும் பெயர் அப்பாச்சி ஆர்டிஆர் 165 உடன் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த புதிய பைக்கிற்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ. 1.45 லட்சம் என்ற விலையை நிர்ணயித்திருக்கின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் வகையில் இப்பைக்கிற்கு அழகு சேர்க்கப்பட்டிருக்கின்றது. தனது பல கால டிராக் பயன்பாட்டு வாகன உற்பத்தி அனுபவத்தைக் கொண்டு டிவிஎஸ் நிறுவனம் இப்பைக்கை உருவாக்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது. இதற்கு இருசக்கர வாகனத்தின் மிகவும் முரட்டுத் தனமான மற்றும் கவர்ச்சியான தோற்றமே சான்று.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ஏற்கனவே மிக பவர்ஃபுல் இருசக்கர வாகனமாக காட்சியளிக்கின்றது. இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் நிறுவனம் இப்பைக்கை ஆர்பி வெர்ஷனில் உருவாக்கியிருக்கின்றது. அதேநேரத்தில், இந்த பைக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

200 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. பைக்கின் விற்பனை ஆன்லைன் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இதுகுறித்து மேலும் விபரங்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

சற்றே அதிக விலைக் கொண்ட தயாரிப்பாக அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான வேரியண்டாக விற்பனைக்குக் கிடைக்கும் ஆர்டிஆர் 160 4வி ரூ. 1.15 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக் விலையில் மட்டுமல்ல திறன் வெளிப்பாட்டையும் அதிகளவில் கொண்டிருக்கின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

164.9 சிசி சிிங்கிள் சிலிண்டர் 4வி எஞ்ஜின் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 19.2 பிஎஸ் பவரை 10,000 ஆர்பிஎம்மிலும், 14.52 என்எம் டார்க்கை 8,750 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இந்த மோட்டார் இயங்கும். இந்த டிரான்ஸ்மிஷனில் சிறப்பு வசதியாக சூப்பர்-ஸ்லீக் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் 159.7 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் ஓர் ஆயில்-கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 17.63 பிஎச்பி மற்றும் 14.73 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதைக் காட்டிலும் பவர்ஃபுல்லான பைக்காகவே ஆர்டிஆர் 165 ஆர்பி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்த பைக்கில் இத்தகைய அதிகளவுக் கொண்ட டிஸ்கைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, அதிக செயல்திறனுக்காக புதிய சிலிண்டர் ஹெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 35 சதவீத கூடுதல் இன்டேக் மற்றும் ட்வின் எலக்ட்ரோட் ஸ்பார்க் பிளக்கை வழங்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

தொடர்ந்து, நிறுவனம் போர் ஸ்ட்ரோக்கையும் மறு சீரமைப்பு செய்திருக்கின்றது. இதுதவிர, இது ஓர் பிரத்யேக வாகனம் என்பதால் தனித்துவமான ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக்கை மிடுக்கான ஸ்போர்ட்ஸ் பைக்கைப் போன்று காட்சியளிக்கச் செய்கின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி பைக் இந்தியாவில் அறிமுகம்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளையே மிஞ்சும் அழகு! விலை எவ்ளோ தெரியுமா?

தொடர்ந்து, ஸ்லிப்பர் க்ளட்ச், அட்ஜஸ்டபில் க்ளட்ச் மற்றும் பிரேக் லிவர்கள், பின் பக்கத்தில் ரேடியல் டயர்கள், சிவப்பு நிற அலாய் வீல்கள், பிராஸ் கோடட் டிரைவ் செயின் மற்றும் ஸ்பிராக்கெட், புதிய இருக்கைகள், சிவப்பு நிற ஒற்றை துண்டு கிராப் ரெயில் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs launches apache rtr 165 rp bike in india here is full details
Story first published: Thursday, December 23, 2021, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X