புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

ஆர்டிஆர் 165 ஆர்பி (RTR 165 RP) என்கிற பெயரில் புதிய அப்பாச்சி மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தும் பணியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி தனது புதிய மோட்டார்சைக்கிளை வெளியிட தயாராகி வருவதாக தற்போது அறிக்கை ஒன்றின் மூலம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

மேலும் இந்த வெளியீடு, வரும் 14ஆம் தேதி டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையில் நடத்தப்பட உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் தொடர்பாக இந்த அறிக்கையுடன் வெளியிடப்பட்டுள்ள படத்தில், 'Turn Your RAD ON' என்ற வாங்கியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

மேலும், தலைக்கீழான C-வடிவிலான எல்இடி விளக்குகளை கொண்ட இந்த புதிய மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப் அமைப்பையும் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. மற்றப்படி இந்த புதிய பைக் அப்பாச்சி வரிசையில் தான் கொண்டுவரப்படுகிறது என எந்தவொரு இடத்திலும் டிவிஎஸ் நிறுவனம் குறிப்பிடவில்லை.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

ஆனால் நமக்கு இதுவரையில் கிடைத்துள்ள தகவல்கள் டிவிஎஸ் அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய மோட்டார்சைக்கிள், 'அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி' என்கிற பெயரில் தற்போதைய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி-இன் ஸ்போர்டியர் வெர்சனாக இருக்கும் என தெரிவிக்கின்றன. இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம் உள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

ஏனெனில் சமீபத்தில் தான் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் புதிய மோட்டார்சைக்கிளிற்காக 'அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி' என்ற பெயரை இந்தியாவில் பதிவு செய்து கொண்டது. இது தொடர்பான காப்புரிமை படத்தினை கீழே காணலாம். இதில், இத்தகைய பெயரை டிவிஎஸ் மோட்டாரின் தாயக நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி (Race Performance - பந்தய செயல்திறன்) பைக்கிலும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் வழக்கமான 159.7சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்துடன் செயல்படுகிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

ஸ்டாண்டர்ட் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடலில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 17.63 பிஎச்பி மற்றும் 14.73 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் புதிய செயல்திறன்மிக்க வெர்சனில் கூடுதல் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு இந்த என்ஜின் பொருத்தப்படலாம்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

அதுமட்டுமில்லாமல், புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த செயல்படுதிறனும் சற்று மேம்படுத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல் தோற்றத்திலும் இந்த ஸ்பெஷல் எடிசனை வேறுப்படுத்தும் நோக்கில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை நிச்சயமாக டிவிஎஸ் நிறுவனம் வழங்கும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

எங்களுக்கு தெரிந்தவரையில், பைக்கின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்தும் நோக்கில் அதேபோல் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி வழக்கத்திற்கு மாறாக சிறிது பின்னோக்கி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்சன் அமைப்புகளில் எந்த அப்டேட்டும் இருக்காது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

தற்போதைய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் டாப் வேரியண்ட்களில் டிஸ்க் ப்ரேக்குகளும், விலை குறைவான வேரியண்ட்களில் ட்ரம் ப்ரேக்குகளும் சக்கரங்களில் உதவிக்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்படுகின்றன. ஆனால் புதிய ஆர்டிஆர் 165 ஆர்பி வெர்சனில் இரட்டை-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படலாம்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி மோட்டார்சைக்கிளா? என்னென்ன வசதிகளை புதியதாக எதிர்பார்க்கலாம்?

விற்பனையில் உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.11 லட்சம் மற்றும் ரூ.1.14 லட்சம் என உள்ளன. வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வெளியிடப்பட உள்ளதே தவிர்த்து, பைக் விற்பனைக்கு அறிமுகமாகுவதற்கு சில மாதங்கள் ஆகலாம். இதற்கிடையில் புதிய நிறத்தேர்வுகளுடன் அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளை டிவிஎஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் வெளியீடு செய்தது.

Most Read Articles
English summary
New TVS Apache RTR 165 RP Launch Soon – What To Expect?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X