டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

இந்தியாவில் இளம் தலைமுறையினரின் முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய மாதத்தவணை திட்டத்தில் பணத்தை மூன்று மாதங்கள் மட்டுமின்றி ஆறு மாதங்களாக செலுத்தும் காலத்தேர்வும் உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

குறிப்பிட்ட வங்கிகளின் கிரேட் கார்டுகளை வைத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ள இந்த மாதத்தவணை திட்டம் வருகிற ஜூலை 15ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மோட்டார்சைக்கிளை டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ரூ.5,000 டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாதத்தவணை திட்டம் ஏற்கனவே டிவிஎஸ் எண்டார்க், அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி, ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

இந்த டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகளில் தான் இந்த சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம் & டிஸ்க் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1,04,220 மற்றும் ரூ.1,07,270 என உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

கூர்மையான தோற்றத்தை கொண்ட அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிளான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட், இரட்டை-டிஆர்எல்களும், பின்பக்கத்தில் எல்இடி டெயில் லேம்ப்பும் வழங்கப்படுகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ்-ஐ பெறும் இந்த டிவிஎஸ் பைக்கில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ளைட் த்ரூ டெக்னாலஜி (GTT) சிறப்பம்சங்களாக கொடுக்கப்படுகின்றன. இந்த அப்பாச்சி பைக் கருப்பு, மெட்டாலிக் நீலம் மற்றும் சிவப்பு என்ற மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159.7சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 17.39 பிஎச்பி மற்றும் 7,250 ஆர்பிஎம்-இல் 14.73 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கிற்கு வட்டியில்லா மாதத்தவணை திட்டம்!! பைக்கை வாங்க இதுதான் சரியான நேரம்

சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் சக்கரத்தில் 270மிமீ-லும், பின் சக்கரத்தில் 200மிமீ-லும் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs #tvs apache
English summary
TVS Motor announced no-cost EMI offer for Apache RTR160 4V.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X