ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து கொண்டு, இந்தியாவின் முன்னணி இரு-சக்கர மற்றும் மூன்று-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் ஈராக் நாட்டில் அதன் வணிகத்தை புதிய ஷோரூம் ஒன்றின் மூலமாக விரிவுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

ஈராக்கில் விற்பனை & சந்தைப்படுத்துதலுக்கு டிவிஎஸ் நிறுவனம் யுஏஇ-இல் இயங்கிவரும் ரிடாஜ் என்ற சர்வதேச அளவில் வணிகம் புரியும் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. அதாவது, டிவிஎஸ் வாகனங்களை ஈராக்கில் ரிடாஜ் நிறுவனம் தான் விற்பனை செய்கிறது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

டிவிஎஸ் மோட்டாரின் இந்த புதிய ஷோரூம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் திறக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் பாலஸ்தீனம் சாலையில் அமைந்துள்ள இந்த ஷோரூம் விற்பனை, சேவை மற்றும் உதிரி பாகங்களின் விற்பனை என மொத்தம் 35 விதமான வசதிகளை வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

500 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்த ஷோரூமில் எச்.எல்.எக்ஸ் 150 5 கியர் மற்றும் டிவிஎஸ் கிங் டீலக்ஸ்+ என்ற அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள் ஒன்றையும், மூன்று-சக்கர வாகனம் ஒன்றையும் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

டிவிஎஸ் கிங் டீலக்ஸ்+ மூன்று-சக்கர வாகனத்தில் 199.26சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்டார் எச்.எல்.எக்ஸ் 150 5 கியர் பைக்கில் கட்டுப்பாட்டு தலைக்கீழ் (IOC) தொழிற்நுட்பத்துடன் 150சிசி ‘ஈக்கோத்ரஸ்ட்' என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

இந்த அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள் ஈராக் சாலைகளுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது செயல்படுதிறனில் மட்டுமின்றி, கருப்பு நிற அலாய் சக்கர ரிம்கள் & என்ஜின் என இந்த மோட்டார்சைக்கிள் தோற்றத்திலும் ஸ்டைலிஷாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

ஈராக்கில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்.எல்100, அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள் எச்.எல்.எக்ஸ் 150 மற்றும் மேக்ஸ் 125, ஸ்கூட்டர்கள் ஜூபிட்டர், வீகோ, ஸ்கூட்டி பெப்+, எண்டார்க் 125 மற்றும் மூன்று-சக்கர வாகனம் கிங் டீலக்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஈராக்கில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதன்முதலாக 2016ல் நுழைந்தது.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

அதன்பின் 2017ல் ரிடாஜ் இண்டர்நேஷ்னல் ஜெனரல் டிரேட் உடன் கூட்டணி சேர்ந்தது. ஈராக்கில் வணிகம் விரிவுப்படுத்தப்பட்டது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிக துணை தலைவர் ஆர் திலீப் கூறுகையில், பாக்தாத்தில் இந்த மார்க்யூ 3எஸ் ஷோரூம் திறப்பு விழாவுடன் ஈராக்கில் எங்களது இருப்பை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

ஈராக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு மோட்டார்சைக்கிள் பிராண்ட்!! தலைநகர் பாக்தாத்தில் புதிய ஷோரூம்..!

ரிடாஜ் சர்வதேச பொது வர்த்தக நிறுவனம் எல்.எல்.சி-யின் நிர்வாக இயக்குனர் எமத் அப்துல் ஜபார் கரீம் அல் ரபீயா கருத்து தெரிவிக்கையில், ஈராக்கில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய எங்களது நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை கிட்டத்தட்ட 4 வருடங்களாக பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. இந்த புதிய ஷோரூம் நாட்டில் எங்கள் கூட்டாண்மை வெற்றியை மேலும் பலப்படுத்தும் என கூறினார்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company Expands Operations In Iraq: First 3S Showroom Inaugurated In Bagdad
Story first published: Tuesday, June 1, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X