நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 எண்டார்க் 125 ஸ்கூட்டரை நமது அண்டை நாடுகளுள் ஒன்றான நேபாளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்திய சந்தையில் 125சிசி ஸ்கூட்டர் பிரிவில் விற்பனை செய்யப்படும் பிரபலமான ஸ்கூட்டர்களுள் டிவிஎஸ் எண்டார்க்கும் ஒன்றாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி சில வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் சமீபத்தில் தான் உலகளாவிய விற்பனையில் 1 லட்சத்தை கடந்திருந்தது.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது நேபாள நாட்டு சந்தையில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படுவதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிக தலைவர் ஆர் திலிப் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிஎஸ்6 எண்டார்க்கின் நேபாள அறிமுக நிகழ்ச்சியில் மேலும் பேசிய திலிப், பிஎஸ்6 மாற்றத்தால், இரு எஃப்.ஐ தொழிற்நுட்பங்களை எண்டார்க் 125 ஸ்கூட்டர் மாடலில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்த வகையில் ஆர்டி-எஃப்.ஐ ப்ளாட்ஃபாரத்தை பெற்ற முதல் ஸ்கூட்டர் டிவிஎஸ் எண்டார்க் 125 ஆகும். ஸ்கூட்டரின் பந்தய பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்கும் பயண அனுபவம் சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை கவரும் என நம்புவதாக கூறியுள்ளார்.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ரேஸ் ட்யுன் ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் எனப்படும் RT-Fi தொழிற்நுடப்த்துடன், ஈக்கோத்ரஸ்ட் ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் எனப்படும் ET-Fi தொழிற்நுட்பமும், எந்தவொரு சாலையிலும் ஓட்டுனர் மகிழ்ச்சியான ரேசிங் அனுபவத்தை பெறுவதற்காக எண்டார்க்கில் வழங்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9.1 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டிவிஎஸ் மொபைல் இணைப்பு செயலி மூலம் இணைக்கக்கூடிய, டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் மற்றும் ப்ளூடூத் வசதி கொண்ட மீட்டர் கன்சோலை எண்டார்க் 125 ஸ்கூட்டரில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்குகிறது.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்தியாவில் ட்ரம், டிஸ்க், ரேஸ் எடிசன் மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த 125சிசி டிவிஎஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.71,095-இல் இருந்து ரூ.81,075 வரையில் உள்ளன.

நேபாளத்தில் விற்பனைக்கு செல்லும் தமிழக டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஏற்கனவே கூறியதுதான், எண்டார்க் 125 ஸ்கூட்டரை தெற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, மத்திய-கிழக்கு மற்றும் ஆசியன் உள்பட 19 வெவ்வேறு விதமான நாடுகளுக்கு தமிழகத்தில், ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company, a reputed manufacturer of two-wheelers and three-wheelers in the world, today announced the launch of BS-VI TVS NTORQ 125 with Race Tuned Fuel Injection (RT-Fi) in Nepal. The company has developed two versions of BS-VI Fi platforms, namely, RT-Fi (Race Tuned Fuel injection) and ET-Fi (Ecothrust Fuel injection). The RT-Fi technology is specially designed to ensure an enjoyable racing experience in all driving conditions.
Story first published: Monday, July 26, 2021, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X