2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

முன்பை அதிக திறன் மற்றும் குறைந்த எடை என பல்வேறு சிறப்பு மாற்றங்களுடன் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. பைக்குறித்த மேலும் முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

சென்னை அடுத்துள்ள ஓசூரை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 2021 பதிப்பு அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை நாட்டில் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1,07,270 என நிர்ணயித்துள்ளது. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மாடலும் ஒன்று. இந்த மாடலை 2021 பதிப்பில் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கியிருப்பது, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

2021 அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் மாடலை டிவிஎஸ் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது. டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட ஆர்டிஆர்160 4வி மற்றும் டிஸ்க் பிரேக் வசதி இல்லா ஆர்டிஆர்160 4வி எனும் இரு விதமான வேரியண்டுகளிலேயே இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

இதில், டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட ஆர்டிஆர்160 4வி வேரியண்டின் விலை ரூ. 1,10,320 ஆகும். டிஸ்க் பிரேக் அல்லாத ட்ரம் பிரேக்கை மட்டும் கொண்டிருக்கும் ஆர்டிஆர்160 4வி வேரியண்டை ரூ. 1,07,270 என்ற விலையில் விற்பனைச் செய்ய இருக்கின்றது. இதுவும், எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

டிவிஎஸ் நிறுவனம் இப்பைக்கில் 159.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே பயன்படுத்தி வருகின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 17.63 பிஎஸ் பவரை 9,250 ஆர்பிஎம்மிலும், 14.73 என்எம் டார்க்கை 7,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

இந்த எஞ்ஜினைக் கூடுதல் சிறப்பானதாக மாற்றும் விதமாக 5 ஸ்பீடு சூப்பர்-ஸ்லிக் தொழில்நுட்பத்தை டிவிஎஸ் இணைத்திருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் முன்பிருந்த, அதாவது, 2020 வெர்ஷன் ஆர்டிஆர் 160 4வி பைக்கைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாட்டை வழங்க உதவியாக இருக்கின்றது.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

எனவேதான் 160சிசி பிரிவின் மிக அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிளாக இதுமாறியிருக்கின்றது. அதேசமயம், முந்தைய மாடலைவிட இது 2 கிலோ வரையில் எடைக் குறைவான பைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், டிஸ்க் வேரியண்டின் ஒட்டுமொத்த எடை 147 கிலோவாகவும், டிஸ்க் அல்லா ட்ரம் வேரியண்டின் எடை 145 கிலோவாக மாறியுள்ளது.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

இதுமட்டுமின்றி, கார்பன் ஃபைபர் பேட்டர்னிலான இரு நிற இருக்கை, கூர்மையான நகம் வடிவத்திலான எல்இடி ஹெட்லேம்ப், ஹெட்லைட் அடிப்பகுதியில் பகல்நேர பனி மின் விளக்கு என சில கூடுதல் சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சிறப்பு கருவிகள் அனைத்தும் இணைந்து அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை பிரீமியம் பைக்காக மாற்றியிருக்கின்றன.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்... முன்பை விட அதிக திறன், குறைந்த எடை!!

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மூன்று விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். ரேசிங் சிவப்பு, இரவு கருப்பு மற்றும் உலோக நீலம் ஆகிய நிறங்களில் மோட்டார்சைக்கிள் கிடைக்கும். "எடை, திறன், சிறப்பு அம்சங்கள் என அனைத்திலும் இப்பைக் அதிக சிறப்பு வாய்ந்ததாக களமிறங்கியிருப்பதாக" டிவிஎஸ் நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
TVS Motor Launches 2021 Apache RTR 160 4V – The ‘Most Powerful’ Motorcycle In Its Class. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X