Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜூபிடர் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் அறிமுகம்... இதுவரை எந்த டிவிஎஸ் வாகனமும் பெற்றிராத வசதியுடன்!!
இதுவரை எந்தவொரு டிவிஎஸ் வாகனமும் பெற்றிராத தொழில்நுட்ப வசதியுடன் புதிய டிவிஎஸ் ஜூபிடர் இசட்எஸ் டிஸ்க் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ், அதன் புகழ்பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் புதிய வேரியண்ட் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூபிடர் எசட் எக்ஸ் டிஸ்க் எனும் ஸ்கூட்டரை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் புதிதாக டிவிஎஸ் நிறுவனத்தின் இன்டெல்லிகோ எனும் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த வசதியைப் பெறும் முதல் டிவிஎஸ் இருசக்கர வாகனம் இதுவே ஆகும். இந்த புதிய தொழில்நுட்பமானது ரைடருக்கு அற்புதமான ஓட்டும் அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் கூறுகின்றது.

இதற்காகவே பிரத்யேகமாக இந்த தொழில்நுட்பத்தை டிவிஎஸ் உருவாக்கியிருக்கின்றது. மேலும், இந்த புதிய புதிய தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு நண்பனாக செயல்படும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், சிறந்த கம்ஃபோர்டான அனுபவம், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த மாசு ஆகியவற்றை டிவிஎஸ் இன்டெல்லிகோ தொழில்நுட்பத்தின் வாயிலாக இனி டிவிஎஸ் பயனர்கள் பெற முடியும்.

இந்த அம்சத்தைப் பெற்று களமிறங்கியிருக்கும் டிவிஎஸ் ஜூபிடர் இசட்எக்ஸ் வேரியண்டிற்கு ரூ. 72,347 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை புதிய நிற தேர்வில் வழங்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில், ஸ்டார்லைட் நீலம் மற்றும் ராயல் ஒயின் ஆகிய நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்க இருக்கின்றன.

தொடர்ந்து, எல்இடி ஹெட்லேம்ப், செல்போன் சார்ஜர், 2 லிட்டர் குளோவ் பாக்ஸ் மற்றும் 21 லிட்டர் அளவிலான ஸ்டோரேஜ் ஆகியவ சிறப்பு வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி சிறந்த ஓட்டும் அனுபவத்தை வழங்குவதற்காக அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பர்கள் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இது 110சிசி எஞ்ஜின் கொண்ட ஸ்கூட்டராகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 5.5kW வரையிலான திறனை 7,000 ஆர்பிஎம்மில் வெளியேற்றக் கூடியது. தொடர்ந்து 8.4 என்எம் டார்ககை 5,500 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். இந்த எஞ்ஜினில் ஈகோத்ரஸ்ட் ப்யூவல் இன்ஜெக்சன் எனும் தொழில்நுட்பத்தையும் டிவிஎஸ் புகுத்தியுள்ளது.

இது அதிக மைலேஜை உறுதி செய்ய உதவும். அதாவது, தற்போதைய 110சிசி வாகனங்களைக் காட்டிலும் 15 சதவீத பெட்டர் மைலேஜை இந்த தொழில்நுட்பம் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, சுலபமான ஸ்டார்டிங் வசதி மற்றும் அதிக ஆயுட்காலத்தையும் இது வழங்க உதவும்.