நேபாளியர்களுக்கு அடித்த யோகம்! தமிழகத்தில் இருந்து பறக்கிறது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்.. முழு தகவல்!

டிவிஎஸ் நிறுவனத்தின் மார்வல் எடிசன் ஸ்கூட்டர்கள் நேபாளத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம் டிவிஎஸ். இந்நிறுவனம், சிறப்பு எடிசன்களாக சூப்பர் ஸ்குவாட் ஸ்கூட்டர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பிரத்யேக டிசைன் கொண்ட ஸ்கூட்டர்கள் மார்வல் தயாரிப்பில் வெளி வந்த சூப்பர் ஹீரோக்களின் உருவத்தை பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் மற்றும் வண்ணத்தைக் கொண்டிருக்கின்றன.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

இத்தகைய சிறப்பு பதிப்பு வாகனங்களையே டிவிஎஸ் மோட்டார்ஸ் தற்போது நேபாளியர்களுக்காக அந்நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் மூன்று விதமான மார்வல் கதாப்பாத்திரங்களிலான இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

ஐயர்ன் மேன் (இன்வின்சிபிள் ரெட்), ஸ்டீல்த் பிளாக் (பிளாக் பேந்தர்), காம்பாட் ப்ளூ (கேப்டைன் அமெரிக்கா) ஆகிய நிறங்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்களின் கேரக்டர்களில் வாகனங்களை விற்பனைக்கு வழங்ககி வருகின்றது. இதே ரகத்திலான வாகனங்களையே டிவிஎஸ் நிறுவனம் நேபாளத்தில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

இன்வின்சிபிள் சிவப்பு தேர்வானது சிவப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் காட்சியளிக்கின்றது. இந்த நிற வாகனத்திலேயே அயர்ன் மேன் கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் மற்றும் டிசைன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, 1963ம் ஆண்டைக் குறிப்பிடக்கூடிய '63' எனும் இந்த இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

ஸ்டீல்த் கருப்பு தேர்வு, பிளாக் பாந்தர் கதாபாத்திரத்திற்கு உருவத்தைக் கொடுக்கும் நோக்கில் இந்த வாகனத்திற்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் பெரும்பாலான பகுதி கருப்பு நிறத்தைக் கொண்டிருந்தாலும், சில இடங்களில் ஊதா நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வாகனத்திலும் '66' எனும் எண் பொறிக்கப்பட்டுள்ளது. இது 1966 எனும் ஆண்டைக் குறிக்கக் கூடியது.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

காம்பாட் நீலம், கேப்டைன் அமெரிக்கா கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தக் கூடிய தேர்வு இதுவாகும். சூப்பர் ஹீரோவின் கவசத்தில் இருக்கக் கூடிய ஸ்டாரை பிரதிபலிக்கும் பெயிண்டே இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, இந்த வாகனத்திலும் 1941 ஆம் ஆண்டைப் பிரதிபலிக்கக் கூடிய '41' என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டுகள் அனைத்தும் அந்தந்த வருடத்தில் குறிப்பிட்ட காதாபாத்திரங்கள் தோன்றப்பட்டன என்பதைக் குறிக்கின்றது.

நேபாளியர்களுக்கு அடித்த யோகம்... தமிழகத்தில் இருந்த பறக்கின்றது மார்வல் எடிசன் டிவிஎஸ் ஸ்கூட்டர்கள்... முழு விபரம்!

இந்த சூப்பர் ஹீரோ ஸ்குவாட் பதிப்பு ஸ்கூட்டர்களில் 124.8 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9.38 பிஎஸ் மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன், சிங்கிள் டிஸ்க் பிரேக், டெலிஸ்கோபிக் ஃபோர்க், முழுமையான டிஜிட்டல் திறன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஸ்மார்ட்-எக்ஸ்-கனெக்ட் என எக்கசக்க வசதிகளைப் பெற்றிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Launches Marvel Edition Ntorq 125 In Nepal. Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X