தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவரும் தற்போதைய சூழலில் பல்வேறு வணிகங்கள் தடைப்பட்டு போயுள்ளன. அதிலும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த கடந்த மாதத்தில் எல்லாம் வட இந்தியா முழுவதும் ஸ்தம்பித்து இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

இதில் ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா. வழக்கம்போல் வாகனங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனை கிட்டத்தட்ட நிறுவனங்கள் அனைத்தின் கடந்த மே மாத விற்பனை நிலவரத்திலும் பார்க்க முடிகிறது.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

தமிழகத்தில், ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த 2021 மே மாதத்தில் மொத்தம் 166,889 தயாரிப்பு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020 மே மாதத்தில் ஊரடங்குகள் இன்னமும் கடுமையாக இருந்ததினால் டிவிஎஸ் நிறுவனம் வெறும் 69,008 யூனிட் தயாரிப்பு வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

இந்த வகையில் டிவிஎஸ் நிறுவனம் சுமார் 141.84 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் அதேநேரம் 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய எண்ணிக்கை 30.47 சதவீதம் குறைவாகும். ஏனெனில் கடந்த ஏப்ரலில் 2,38,983 டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

1,66,889 என்ற மொத்த விற்பனை எண்ணிக்கையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டாரின் இருசக்கர (மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட்) மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் அடங்குகின்றன.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

உள்நாட்டு விற்பனையும் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியும் சேர்த்து மொத்தமாக 1,25,188 டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஸ்கூட்டர்கள் 19,627 யூனிட்களும், மொபெட்கள் 9,601 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் வெளிநாடுகளுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விற்பனையில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனங்களே பெரிதும் துணையாக நிற்கின்றன.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

ஏனெனில் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று-சக்கர வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை. கடந்த மே மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 3-சக்கர வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 131 மட்டுமே. இதற்கு முந்தைய ஏப்ரலிலும் பெரியளவில் இல்லை, 412 மட்டுமே.

தொடர் ஊரடங்கு எதிரொலி... மூன்றில் ஒன்றாக குறைந்தது டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை!

டிவிஎஸ் நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே அதன் 3-சக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரிக்கிறது. கடந்த மாதத்தில் மாநில அரசாங்கங்கள் கொண்டுவந்த ஊரடங்குகளினால் டிவிஎஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை தான் பாதிக்கப்பட்டுள்ளதே தவிர்த்து வெளிநாட்டு ஏற்றுமதிகள் வழக்கம்போல சிறப்பானதாகவே இருந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company registers sales of 166,889 units in May 2021 as against sales of 58,906 units in the month of May 2020. Domestic sales in May 2021 is lower due to lockdowns in many states, but retails continue to be ahead of despatch. We have reduced dealer stocks to support our dealers and channel partners and will produce to maintain adequate inventories for customer demand. We expect that pent up demand will return as markets begin to reopen.
Story first published: Thursday, June 3, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X