மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்.. இனி அந்த நாட்டிலும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் மத்திய அமெரிக்காவில் உள்ள இரு நாடுகளில் வர்த்தக பணிகளைத் தொடங்குவதற்காக அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்டீவ் மோட்டார்ஸ் எஸ்ஏ (Active Motors SA) எனும் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் என்ன மாடல் இருசக்கர வாகனங்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கிறது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், டிவிஎஸ் மோட்டார் (TVS Motor). இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்புகளாக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

அவ்வாறு நிறுவனம் விற்பனைச் செய்து வரும் உலக நாடுகளின் பட்டியலில் தற்போது புதியதாக மேலும் இரு நாடுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றது. மத்திய அமெரிக்காவில் இருக்கும் இரு புதிய நாடுகளிலேயே டிவிஎஸ் நிறுவனம் புதிதாக வர்த்தக பணிகளைத் தொடங்கியிருக்கின்றது. இரு நாடுகளிலும் இருசக்கர வாகனங்களை வர்த்தகம் செய்யும் பொருட்டு, ஆக்டீவ் மோட்டார்ஸ் எஸ்ஏ (Active Motors SA) எனும் மத்திய அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனத்துடன் டிவிஎஸ் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

இந்த நிறுவனம் நிகரகுவா (Nicaragua) மற்றும் கோஸ்டா ரிகா (Costa Rica) ஆகிய இரு நாடுகளில் பலமான வர்த்தக நெட்வொர்க்குகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த இரு மத்திய அமெரிக்க நாடுகளில் வர்த்தகத்தை தொடங்கும் பொருட்டே டிவிஎஸ் மோட்டார், ஆக்டீவ் மோட்டார்ஸ் எஸ்ஏ நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிறுவனம் குருபோ க்யூ (Grupo Q) நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த நிறுவனம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்வது மட்டுமின்றி, அவற்றை சர்வீஸ் செய்வது, உதிரி பாகங்களை வழங்குவது மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிற சேவைகளைச் செய்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும்.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

தொடர்ந்து, டிவிஎஸ் நிறுவனம் அந்நாடுகளில் விற்பனையகங்களை அமைக்கவும் ஆக்டீவ் மோட்டார்ஸ் உதவ இருக்கின்றது. சுமார் 50க்கும் அதிகமான விற்பனையகங்கள் மற்றும் 3 ஃபிளாக்ஷிப் அவுட்லெட்டுகள் அமைக்கப்பட இருக்கின்றன. டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (Apache RTR 200 4V), அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (Apache RTR 160 4V), அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி (Apache RTR 160 2V), ஸ்ட்ரைகர் 125 (Stryker 125), ரைடர் 125 (Raider 125), எச்எல்எக்ஸ் 150 5எஸ் (HLX 150 5S) மற்றும் நியோ என்எக்ஸ் (Neo NX) ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய நாடுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

இத்துடன், நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான என்டார்க் 125 (NTORQ 125)-யையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே குவாத்தமாலா (Guatemala), எல் சால்வடார் (El Salvador) மற்றும் ஹோண்டுராஸ் (Honduras) ஆகிய நாடுகளில் தனது இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

புதிய நாட்டில் வர்த்தகம் தொடங்கப்பட்டிருப்பது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் பிசினஸ் தலைவர் ஆர். திலீப் கூறியதாவது, "டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு மத்திய அமெரிக்கா முக்கியமான சந்தையாக உள்ளது. அந்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் வலுவான வம்சாவளியைக் குருபோ க்யூ கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்துடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

மத்திய அமெரிக்காவில் டிவிஎஸ் மோட்டாரின் சந்தை இருப்பை விரிவுபடுத்துவதற்கும், சிறந்த-இன்-கிளாஸ் தயாரிப்புகள் மூலம் புதுமைகளை உருவாக்குவதற்கும், வாடிக்கையாளர் அனுபவ அளவுகோலை அமைப்பதற்கும் இந்த கூட்டணி ஓர் குறிப்பிடத்தக்க படியாகும். சந்தையைப் பற்றி ஆழமாக அறிய, தொழில்துறையில் சிறந்த அனுபவத்தை வழங்க மற்றும் சில்லறை நிதியளிப்புத் திறன் ஆகியவற்றில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு, குருபோ க்யூ சிறந்த உறுதுணையாக இருக்கும்" என்றார்.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

டிவிஎஸ் நிறுவனத்துடனான இணைவு குறித்து குருபோ க்யூ நிறுவனத்தின் துணைத் தலைவரும், வர்த்தகத் தலைவருமான கார்லோஸ் என்ரிக் குய்ரோஸ் கூறியதாவது, "எங்கள் குருபோ க்யூ நிறுவனத்தின் வாயிலாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய இருக்கின்றோம். வாடிக்கையாளர் தேவைகளையும் பூர்த்தி செய்வோம். எங்கள் நிறுவனத்தின் வாயிலாக பல புதுமைகளை உருவாக்கி வருகின்றோம்.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

க்ரூபோ கியூ ஹோல்டிங் நிறுவனத்தின் புதிய நிறுவனமான ஆக்டிவ் மோட்டார்ஸ், நிகரகுவா மற்றும் கோஸ்டாரிகா ஆகிய சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கு தரமான இயக்கம் தீர்வுகள் மற்றும் அணுகல்களை வழங்கி வருகிறது. இது TVS மோட்டார் நிறுவனத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும்" என்றார்.

சூப்பர்! மத்திய அமெரிக்க நிறுவனத்துடன் 'கை' கோர்த்த தமிழக நிறுவனம்... இனி அந்த நாட்லையும் நம்ம ஊரு தயாரிப்பு கிடைக்கும்!

அண்மையில் நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் வர்த்தக எல்லையை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய அர்ஜென்டினா நாட்டில் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் அதன் வர்த்தக எல்லையை தற்போது விரிவாக்கம் செய்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs motor strengthens its presence in central america by partnering with grupo q
Story first published: Thursday, December 9, 2021, 17:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X