டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

125சிசி ஸ்கூட்டர்கள் பிரிவில் ஆக்ஸஸ் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட மாடல்களை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்துவரும் நிலையில், இவற்றுடன் புதியதாக அவெனிஸ் என்ற ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

டிவிஎஸ் எண்டார்க்கிற்கு போட்டியாக விளங்கும் சுஸுகி அவெனிஸ் ஸ்போர்டியான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது மட்டுமின்றி, ஏகப்பட்ட உதவிகரமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் எண்டார்க், யமஹா ரே இசட்ஆர் உள்ளிட்டவற்றிற்கு இந்த புதிய சுஸுகி பைக் எந்த அளவிற்கு போட்டியாக விளங்குகிறது என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

இந்த மூன்று 125சிசி ஸ்கூட்டர்களும் கூர்மையான லைன்கள், நேர்த்தியான ஸ்டைலிங் மற்றும் செதுக்கப்பட்டது போன்ற உடற் அமைப்புகளுடன் ஒன்றுக்கொன்று இணையான ஸ்போர்டியான தோற்றத்தை கொண்டுள்ளன. இருப்பினும் அவெனிஸ் சமீபத்திய அறிமுகம் என்பதால் மற்ற இரண்டை காட்டிலும் மாடர்னான ஸ்டைலை கொண்டிருக்கிறது.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

இரட்டை-நிற பெயிண்ட்டில் அவென்ஸின் கிராஃபிக்ஸ் மிக பிரமாதமாகவே வழங்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை இந்த புதிய சுஸுகி ஸ்கூட்டரின் பக்கம் கவர்ந்திழுக்கும். மேலும், அவெனிஸிற்கு மோட்டோஜிபி பெயிண்ட் தேர்வையும் சுஸுகி வழங்கியுள்ளது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், மற்ற இரண்டுடன் ஒப்பிடுகையில் சுஸுகி அவெனிஸ் நீளமானதாக விளங்குகிறது.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

இருப்பதிலேயே டிவிஎஸ் என்டார்க் நீளம் குறைவானதாக உள்ளது. அகலம் மற்றும் உயரத்தில் யமஹா ரே இசட்ஆர் பெரியதாக உள்ளது. ஆனால் அவெனிஸ், ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களில் 5.2 கொள்ளளவில் பெட்ரோல் டேங்கு வழங்கப்பட, எண்டார்க்கில் 5.8 லிட்டர் கொள்ளவில் பெட்ரோல் டேங்கினை டிவிஎஸ் வழங்குகிறது. தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரம் மூன்றிலும் பெரியளவில் வித்தியாசம் இல்லை.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

க்ரவுண்ட் கிளியரென்ஸ் எனப்படும் தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பாகத்தின் உயரம் புதிய அவென்ஸில் அதிகமாக 160மிமீ-இல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் யமஹா ரே இசட்.ஆர் மாடல் சற்று பின் தங்கியுள்ளது (145மிமீ). நீளம் அதிகமாக வழங்கப்பட்டிருப்பினும், இந்த மூன்று ஸ்கூட்டர்களை ஒப்பிடுகையில், சுஸுகி அவெனிஸில் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் குறைவு.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

டிவிஎஸ் எண்டார்க் எடைமிக்கதாக (116 கிலோ) விளங்க, இலகுவானதாக (99 கிலோ) ரே இசட்.ஆர் விளங்குகிறது. எடையில் அவெனிஸ் இவை இரண்டிற்கு இடையில் உள்ளது. இவ்வாறு மற்ற விஷயங்கள் அனைத்திலும் பிரபலமான எண்டார்க், ரே இசட்.ஆர் மாடல்களுக்கு சரியான போட்டியாக புதிய சுஸுகி அவெனிஸ் விளங்கினாலும், இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்கும் பகுதியின் கொள்ளளவில் பெரிய அளவில் நம்மை இந்த சுஸுகி ஸ்கூட்டர் ஏமாற்றியுள்ளது.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

ஏனெனில் எண்டார்க், ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களில் முறையே 22 லிட்டர், 21 லிட்டர் கொள்ளளவில் இருக்கை அடியில் சேமிப்பிடம் வழங்கப்பட்டு வர, அவென்ஸில் வெறும் 12.8 லிட்டர் கொள்ளளவில் இந்த பகுதியினை சுஸுகி வழங்கியுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ப்ளூடூத் மொபைல்போன் இணைப்பு, போன் சார்ஜிங் வசதி, எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்களை இந்த மூன்று 125சிசி ஸ்கூட்டர்களும் கொண்டுள்ளன.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

நாவிகேஷன், என்ஜின் கில் ஸ்விட்ச் வசதிகள் மற்ற இரண்டில் வழங்கப்பட்டிருக்க, ரே இசட்.ஆரில் வழங்கப்படுவதில்லை. அதேபோல் எரிபொருள் நிரப்பும் பகுதி மற்ற இரண்டில் வெளிப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் ரே இசட்.ஆர் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் கொடுக்கப்படுகிறது. பின்பக்க டெயில்லைட்டும் இந்த யமஹா ஸ்கூட்டரில் எல்இடி தரத்தில் இல்லை.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆஃப்-ஆகும் வசதி எண்டார்க் மாடலில் வழங்கப்படுவதில்லை. ஆனால் டர்ன் சிக்னல் விளக்கு இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரில் மட்டுமே எல்இடியாக பொருத்தப்படுகிறது. சமீபத்திய அவென்ஸில் கூட சாதாரண பல்ப்-ஆகவே சுஸுகி வழங்கியுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு, சுஸுகி அவென்ஸில் 124.3சிசி என்ஜினும், எண்டார்க்கில் 124.8சிசி என்ஜினும், ரே இசட்.ஆரில் 125சிசி என்ஜினும் பொருத்தப்படுகின்றன.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

இதில் எண்டார்க்கின் என்ஜின் அதிக ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-இல் 10.2 பிஎஸ் மற்றும் 5500 ஆர்பிஎம்-இல் 10.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் என்ஜின் அமைப்பில் சிலிண்டருக்கு 3 வால்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மற்ற இரண்டில் 2 வால்வுகளே உள்ளன.

டிவிஎஸ் எண்டார்க் & யமஹா ரே இசட்.ஆரை சமாளிக்குமா புதிய சுஸுகி அவெனிஸ்? விரிவான விபரங்கள் உள்ளே!!

புதிய அவென்ஸின் 124.3சிசி என்ஜின் 6750 ஆர்பிஎம்-இல் 8.7 பிஎஸ் மற்றும் 5500 ஆர்பிஎம்-இல் 10 என்எம் டார்க் திறன் வரையில் ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. ரே இசட்.ஆர் மாடலின் என்ஜின் அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-இல் 8.2 பிஎஸ் மற்றும் 5000 ஆர்பிஎம்-இல் 10.3 என்எம் டார்க் திறன் வரையில் வழங்கக்கூடியது. டிரான்ஸ்மிஷனுக்கு மற்ற இரண்டில் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட, ரே இசட்.ஆர் ஸ்கூட்டரில் வி-பெல்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை யமஹா பொருத்துகிறது.

Most Read Articles

English summary
TVS Ntorq Vs Suzuki Avenis Vs Yamaha RayZR - Comparison.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X