நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் நிறுவனத்தின் ரைடர் 125 பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இப்பைக் விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் பல ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புதுமுக அறிமுகங்களில் ஒன்றாக ரைடர் (Raider) இருக்கின்றது. இது ஓர் 125 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனமாகும். இந்த பைக் இந்தியாவின் 125 பிரிவு இருசக்கர வாகன சந்தையில் ஆதிக்கம் செய்யும் என இதன் அறிமுகத்தின்போது பலரால் பேசப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் ஓர் தரமான சம்பவத்தை டிவிஎஸ் ரைடர் 125 தற்போது இந்தியாவில் நிகழ்த்தியிருக்கின்றது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இந்த பைக் போன செப்டம்பர் மாதம் 16ம் தேதி அன்றே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டிவிஎஸ் ரைடர் விற்பனைக்கு வந்து ஒரு மாதங்கள் மற்றும் சில நாட்களே ஆகின்ற நிலையில் பிற எந்தவொரு இருசக்கர வாகனமும் செய்யாத ஓர் விற்பனை சாதனையை இந்த பைக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

அதிகபட்சமாக டிவிஎஸ் ரைடர் 7 ஆயிரம் யூனிட் வரை விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே இந்தியர்கள் மத்தியில் இத்தகைய அமோக வரவேற்பை ஓர் பைக் பெறுவது இதுவே முதல் முறை என இந்திய இருசக்கர வாகன உலக வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் ரைடர் 125 ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 77,500 தொடக்க விலையில் இருந்து ரூ. 85,469 வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கும். பைக்கின் ஸ்டைல் மற்றும் அதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள், இது 125 சிசி பைக்தானா என கேள்வியெழுப்பும் வகையில் இருக்கின்றது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

அந்தளவிற்கு மிகவும் நேர்த்தியான மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான தோற்றம் ரைடருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதிக கட்டுமஸ்தான எரிபொருள் நிரப்பும் தொட்டி, எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் எரியக் கூடிய மின் விளக்கு, ஸ்லீக் பெல்லி பேன் மற்றும் தனி தனியாக இருக்கை அமைப்பு ஆகிய ரைடருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இத்துடன், கியரின் பொசிஷன், டேக்கோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர், நேரம், ஓடா மீட்டர், எரிபொருள் மற்றும் இன்னும் பல தகவல்களை வழங்கக் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் 5 இன்சிலான டிஎஃப்டி திரை ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இதுமட்டுமின்றி குரல் கட்டளை மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட விலையுயர்ந்த பைக்குகளில் இருக்கும் வசதிகளும் டிவிஎஸ் ரைடர் 125இல் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விஷயத்திலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சத்தமே இல்லாமல் ஆனாகும் வசதி, ஈகோ மற்றும் பவர் எனும் இரு விதமான இயக்க மோட்கள் மற்றும் இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்வை வழங்கப்பட்டிருக்கின்றன.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இந்த ஸ்டோரேஜில் ஆவணங்கள், செல்போன் மற்றும் கண்ணாடிகளை பத்திரமாக வைத்துக் கொள்ள முடியும். டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 பைக்கில் 124.8 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 11.38 பிஎஸ் மற்றும் 11.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இத்துடன், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் கேஸ் சார்ஜட் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக டிஸ்க் பிரேக் வேரியண்டில் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

நம்பவே முடியல! வந்த ஒரே மாசத்துல பல ஆயிரம் யூனிட் விற்பனை... கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இதுமாதிரியான எக்கசக்க அம்சங்களைக் கொண்டிரக்கின்ற காரணத்தினாலேயே டிவிஎஸ் ரைடர் 125 பைக் இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக, பிற அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட 125 சிசி பைக்கைக் காட்டிலும் குறைவான விலையைக் கொண்டிருப்பதாலும், குறைந்த விலையில் பல மடங்கு அதிக வசதிகளைக் கொண்டிருப்பதனாலும் இப்பைக்கிற்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. ஆகையால், எதிர்காலத்தில் இந்த பைக் இன்னும் அதிகளவில் விற்பனையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs raider 125 gets more than 7000 unit sales in first month
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X