Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்ராசக்கை... பொங்கலுக்காக தமிழ் பெயரில் ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்... டிவிஎஸ் அறிமுகம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு பதிப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழ் பெயரில் வந்துள்ள இந்த சிறப்பு பதிப்பு மாடலின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெண்கள் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஸ்கூட்டர் மாடலாக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் இருந்து வருகிறது. எளிமையான டிசைன், கையாள்வதற்கு இலகுவான ஸ்கூட்டராக இருப்பதுடன் விலையிலும் பெண்களுக்கு தோதுவான மாடலாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொங்கல் பண்டிகையின்போது பெண்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதத்தில், ஸ்கூட்டி பெப் ப்ள்ஸ ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த சிறப்பு பதிப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டருக்கு முதல் காதல் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்திற்காகவே இந்த மாடல் தமிழ் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் பெயரில் வெளியிடப்பட்ட முதல் சிறப்பு பதிப்பு மாடலாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

'முதல் காதல்' என்ற வாசகம் ஸ்கூட்டரின் பக்கவாட்டு பேனல்களில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக தமிழ் பெயரில் வந்துள்ள ஸ்கூட்டர் மாடலாகவும் குறிப்பிடப்படலாம்.

இந்த தமிழ் பெயர் விஷயம், வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று நம்பலாம். இந்த ஸ்கூட்டருக்கு தனித்துவமான மதிப்பை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான உணர்வையும் வழங்குகிறது.

இந்த ஸ்கூட்டருக்கு ரூ.56,085 சென்னை எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் முதல் காதல் எடிசன் மாடல் பழுப்பு, சாம்பல், கருப்பு என மூவர்ண அலங்காரம் மற்றும் அசத்தலான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அலங்காரத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இருக்கையும் கூட பழுப்பு - கருப்பு வண்ணங்களில் இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் முதல் காதல் எடிசன் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 87.8 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 5.4 பிஎஸ் பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் ET-FI ஈக்கோத்ரஸ்ட் என்ற தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதால், அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறனை வழங்கும்.

இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், டிரம் பிரேக்குகள், கருப்பு வண்ண அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் 93 கிலோ எடை கொண்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: மாதிரிக்காக டிவிஎஸ் பெப் ப்ளஸ் ஸ்கூட்டரின் பிற வண்ணத் தேர்வுகள் கொண்ட படங்கள் இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.