போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்கின் தோற்றத்தில் 500சிசி மோட்டார்சைக்கிள் ஒன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீன மோட்டார்சைக்கிளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

சீனாவில் செயல்பட்டுவரும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்ற நாடுகளில் வரவேற்பை பெற்றுவரும் வாகனங்களின் போலி மாடல்களை தங்களது நாட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரையில், நமது சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டின் ஹிமாலயன் பைக்கின் போலி பைக் வேறொரு பெயரில் சமீபத்தில் சீனாவில் அறிமுகமானது. அதனை தொடர்ந்து இப்போது டிவிஎஸ் செப்பெலின் கான்செப்டில் இருந்து உருவாக்கப்பட்டது போன்றதான தோற்றத்தை கொண்டிருக்கும் சியாங்லாங் ஜே.எஸ்.எக்ஸ்500ஐ என்ற மோட்டார்சைக்கிள் அந்த நாட்டில் களமிறக்கப்பட்டுள்ளது.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார், செப்பெலின் கான்செப்ட் மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அப்போது இந்த கான்செப்ட் மாடல் கொண்ட்டிருந்த தோற்றத்தையே தற்போது இந்த சீன பைக் கொண்டுள்ளது.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

செப்பெலின் கான்செப்ட்டிற்கு டிவிஎஸ் நிறுவனமே இப்போது வரையில் உயிர் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சீன நிறுவனம் டிவிஎஸ் மோட்டாரையே முந்தி கொண்டு அதிகளவில் தயாரிக்கும் அளவிற்கு வடிவமைத்து தனது நாட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

செப்பெலின் கான்செப்ட் மாடலுக்கு நிச்சயம் டிவிஎஸ் நிறுவனம் உரிமையை பெற்றிருக்கும். இருப்பினும் எவ்வாறு சியாங்லாங் நிறுவனம் இந்த பைக்கை வடிவமைத்து தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, எவ்வாறு இந்த சீன நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தது என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை இல்லை.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

சியாங்லாங் ஜே.எஸ்.எக்ஸ்500ஐ மோட்டார்சைக்கிள், டிவிஎஸ் செப்பெலின் கான்செப்ட் கொண்டிருந்த அறுகோண வடிவிலான ஹெட்லேம்ப், படிக்கட்டு போன்றதான இருக்கை அமைப்பு, ரேடியேட்டர் க்ரில், சைடு பேனல்கள், என்ஜின் கௌல் மற்றும் நறுக்கப்பட்ட தோற்றத்தில் பின்பகுதி உள்ளிட்டவை அனைத்தையும் கொண்டுள்ளது.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

இவ்வளவு ஏன் பெட்ரோல் டேங்க் கூட செப்பெலின் பைக்கை ஒத்து காணப்படுகிறது. ஆனால் ஹேண்டில்பார் ஜே.எஸ்.எக்ஸ்500ஐ மாடலில் சற்று உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் செப்பெலின் ஸ்போக்டு சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்களை இந்த பைக் கொண்டுள்ளது.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

இந்த போலி செப்பெலின் பைக்கில் மெட்டாலிக் எக்ஸாஸ்ட் குழாய் சற்று மேல் நோக்கி வளைக்கப்பட்டுள்ளது. செப்பெலின் கான்செப்ட்டில் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் பைக்கில் இருந்து தனித்து தெரியும் வகையில் தங்க நிறத்தில் இருந்தன. ஆனால் இந்த போலி மாடலில் அவ்வாறு இல்லை.

போலி டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக்!! வேறொரு பெயரில் சீனாவில் அறிமுகம்!

சியாங்லாங் ஜே.எஸ்.எக்ஸ்500ஐ பைக்கில் 471சிசி, இரட்டை சிலிண்டர், நீர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 44.87 பிஎஸ் மற்றும் 41 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 150kmph என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
TVS Zeppelin Concept Now Has A Chinese Doppelganger, Meet The Xianglong JSX500i.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X