பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோலின் விலை விண்ணை தொட்டு வருகிறது. மறுப்பக்கம் வாகனங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் உலோகங்களின் மதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதால், இருசக்கர வாகனங்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

இது விற்பனை குறைவிற்கு வழிவகுக்கிறது. சமீப காலங்களில் பெட்ரோலின் விலை 17- 20% உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனங்களின் விலைகள் 10% வரையில் அதிகரித்துள்ளன. இவற்றின் விளைவாக, 2020 நவம்பரை காட்டிலும், கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 28.37% குறைவாக, டாப்-5 நிறுவனங்கள் 12,78,224 இருசக்கர வாகனங்களை இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

ஏனெனில் 2020 நவம்பர் மாதத்தில் 17,84,591 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2021 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 27.25% குறைந்துள்ளது. அந்த மாதத்தில் 17,57,126 2-வீலர்ஸ் விற்கப்பட்டு இருந்தன. பண்டிகை காலத்தினால் கடந்த நவம்பரில் விற்பனை பெருகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

ஆனால் கடந்த 10 வருடங்களில் இந்த தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் தான் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மோசமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனத்தை தவிர்த்து, மற்ற அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையும் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் சரி, மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் சரி கணிசமாக குறைந்துள்ளன.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை கடந்த மாதத்தில் 3,49,943 யூனிட்களாக குறைந்துள்ளது. ஏனெனில் 2020 நவம்பரில் சுமார் 5,91,091 யூனிட் இருசக்கர வாகனங்களையும், 2021 அக்டோபரில் 5,47,970 யூனிட் வாகனங்களையும் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

இந்த வகையில் ஹீரோ நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 40.80%-மும், மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 36.14%-மும் குறைந்துள்ளது. அதாவது 2.40 லட்ச யூனிட்கள் மற்றும் 2 லட்ச யூனிட்கள் குறைவாகும். இரண்டாவது இடத்தை ஹீரோ மோட்டோகார்பை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிடித்துள்ளது.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

கடந்த மாதத்தில் 3.49 லட்ச ஹீரோ வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்க, பஜாஜ் 2-வீலர்ஸ் 3.38 லட்ச யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதன் விற்பனையும் 2020 நவம்பரை காட்டிலும் 12.08 சதவீதமும், 2021 அக்டோபரை காட்டிலும் 13.50%-மும் குறைந்துள்ளது. ஹோண்டா மூன்றாவது இடத்தில் 2,80,381 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் உண்மையில், பெரும்பாலும் ஹோண்டா நிறுவனம் தான் இத்தகைய லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

ஆனால் இம்முறை ஹோண்டா நிறுவனம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 2.80 லட்சமாக ஹோண்டா 2-வீலர்ஸின் விற்பனை குறைந்துள்ளது என்றாலும், 2020 நவம்பரில் சுமார் 4.33 லட்ச இருசக்கர வாகனங்களையும், 2021 அக்டோபரில் 4.32 லட்ச இருசக்கர வாகனங்களையும் ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் விற்பனை முறையே 35.28% மற்றும் 35.13% குறைந்துள்ளது.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

யூனிட்களாக பார்த்தோமேயானால், வழக்கத்தை காட்டிலும் ஹோண்டா 2-வீலர்ஸின் விற்பனை ஏறக்குறைய 1.50 லட்ச யூனிட்கள் குறைந்துள்ளது. நான்காவது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் 2,57,863 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனையும் 2020 நவம்பரை காட்டிலும் 17.22 சதவீதமும், 2021 அக்டோபரை காட்டிலும் 24.49 சதவீதமும் கடந்த நவம்பரில் சரிந்துள்ளது.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

இந்த டாப்-5 லிஸ்ட்டில் கடைசி மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள ராயல் என்பீல்டு கடந்த மாதத்தில் மொத்தம் 51,564 பைக்குகளை உள்நாட்டிலும், வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 நவம்பரில் விற்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் 19.16% குறைவு என்றாலும், இதற்கு முந்தைய 2021 அக்டோபரை காட்டிலும் 16.84% அதிகமாகும்.

பெட்ரோல் 2-வீலர்ஸின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது!! எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகிறதா இந்திய சந்தை?

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தமாக 44,133 பைக்குகளையே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்படி, அக்டோபரை காட்டிலும் கடந்த நவம்பரில் 7,431 ராயல் என்பீல்டு பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் மட்டும் பார்த்தோமேயானால், கடந்த மாதத்தில் இந்த டாப்-5 நிறுவனங்கள் மொத்தம் 9,50,755 இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Two Wheeler Sales Nov 2021 - Worst festive season in a decade.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X