வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பற்றிய விபரங்களை அவை விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கைகள் உடன் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9,53,338 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 33.95 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 14,43,320 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

கடந்த ஏப்ரலில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை தவிர்த்து மற்ற அனைத்து நிறுவனங்களது விற்பனையும் கணிசமாக குறைந்துள்ளன. இருப்பினும் இந்தியாவில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் மோட்டார்சைக்கிள் பிராண்டாக ஹீரோ மோட்டோகார்ப் தொடர்கிறது.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

ஹீரோ நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 3,42,614 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மொத்த விற்பனையில் இது 23.74 சதவீதமாகும். அதுவே முந்தைய மார்ச்சில் 5,44,340 இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

இந்த வகையில் ஹீரோவின் விற்பனை 37.06 சதவீதம் குறைந்துள்ளது. வருடம்-வருடம் ஒப்பீடு இல்லை, ஏனெனில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக 2020 ஏப்ரலில் ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி எந்தவொரு இருசக்கர வாகனமும் விற்பனை செய்யப்படவில்லை.

Rank Domestic Apr-21 Mar-21 Growth (%)
1 Hero 3,42,614 5,44,340 -37.06
2 Honda 2,40,100 3,95,037 -39.22
3 TVS 1,31,386 2,02,155 -35.01
4 Bajaj 1,26,570 1,81,393 -30.22
5 Suzuki 63,879 60,222 6.07
6 Royal Enfield 48,789 60,173 -18.92
வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஹோண்டா 2,40,100 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை உடன் உள்ளது. இது மொத்த விற்பனையில் 16.64 சதவீதம் ஆகும். ஹோண்டாவின் விற்பனையும் 2021 மார்ச் மாதத்தின் 3,95,037 உடன் ஒப்பிடுகையில் 39.22 சதவீதம் குறைவாகும்.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

டிவிஎஸ் 1,31,386 யூனிட் இருசக்கர வாகனங்களின் விற்பனையுடன் மூன்றாவது இடத்தையும், பஜாஜ் ஆட்டோ 1,26,570 யூனிட் இருசக்கர வாகனங்களின் விற்பனையுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றின் விற்பனை முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது முறையே 35.01% மற்றும் 30.22% குறைந்துள்ளன.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

ஏற்கனவே கூறியதுபோல் கடந்த மாத விற்பனையில் சுஸுகி மட்டும் தான் நேர்மறையான சதவீதத்தை விற்பனையில் கண்டுள்ளது. 2021 மார்ச்சில் 60,222 சுஸுகி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையான நிலையில் கடந்த மாதத்தில் 6.07 சதவீதம் அதிகமாக 63,879 யூனிட் சுஸுகி மோட்டார்சைக்கிள்கள் விற்கப்பட்டுள்ளன.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில் உள்ள ராயல் என்பீல்டு கிட்டத்தட்ட 50 ஆயிரம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கொரோனாவின் 2வது அலை குறிப்பாக இந்தியாவில் தான் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்களின் உள்நாட்டு விற்பனை தான் குறைந்துள்ளது.

வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை!! சரிவை நோக்கி இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை!

வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியில் பெரிய அளவில் பிரச்சனை இல்லை போலும். ஏனெனில் பெரும்பாலான இருசக்கர வாகன நிறுவனங்களின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் நல்லப்படியாகவே இருந்துள்ளது. குறிப்பாக பார்த்தோமேயானால், ஹோண்டாவின் ஏற்றுமதி சுமார் 168 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rank Exports Apri-21 Mar-21 Growth (%)
1 Bajaj 2,21,603 1,48,740 48.99
2 TVS 94,807 1,05,282 -9.95
3 Honda 42,945 16,000 168.41
4 Hero 29,671 32,617 -9.03
5 Suzuki 13,970 9,720 43.72
6 Royal Enfield 4,509 5,885 -23.38
Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Two Wheeler Sales April 2021 – Hero, Bajaj, Honda, TVS, Suzuki, Royal Enfield.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X