இப்படி ஒரு பேட்டரிதான் வேணும்... நம்ப முடியாத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி... என்ன இத்தனை செகண்டே போதுமே?

மிக மிக அதிக வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் அதிக வேகத்தில் சார்ஜாகும் அப்பேட்டரிகுறித்த முழு விபரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

மிக அதிக வேகத்தில் சார்ஜாகும் தொழில்நுட்ப வசதிக் கொண்ட பேட்டரியை ஓர் நிறுவனம் தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்புதிய பேட்டரி வெறும் 90 செகண்டுகளிலேயே முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என கூறப்படுகின்றது. இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மஹ்லே (MAHLE) மற்றும் அல்லோட்ரோப் எனர்ஜி (Allotrope energy) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே புதிய அதிக வேகத்தில் சார்ஜாகும் பேட்டரியை உருவாக்கி இருக்கின்றன.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

மின் வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இப்பேட்டரி உருவாக்கப்பட்டிருக்கின்றது. தற்போது, கான்செப்ட் (முன் மாதிரி) மாடலாக மட்டுமே பேட்டரி உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக விரைவில் பயன்பாட்டிற்கு ஏற்ற தரத்தில் பேட்டரியை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றன. மின் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது. மேலும், பணத்தை மிச்சபடுத்த உதவும் ஆகிய காரணங்களால் மின் வாகன பயன்பாட்டை இந்தியா தொடங்கி உலக நாடுகள் பல ஊக்குவிக்க தொடங்கியிருக்கின்றன.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

இருப்பினும், மக்கள் சிலர் மின் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். அவற்றை சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். மேலும், போதிய அளவு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை ஆகிய காரணங்களால் மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற சற்றே தயங்குகின்றனர்.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் அதிக வேகத்தில் சார்ஜாகும் பேட்டரியை உருவாக்கி அசத்தியிருக்கின்றன. இது மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் அமைந்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், அதிக நேரம் சார்ஜ் செய்ய காத்திருக்க வேண்டும் என்ற அச்சத்தைப் போக்கும் வகையில் இப்பேட்டரியின் உருவாக்கம் அமைந்துள்ளது.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் (விற்பனைக்குக் கிடைக்கும்) பெரும்பாலான மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய அதிகபட்சம் 6 மணி நேரங்கள் முதல் 8 மணி நேரங்கள் வரை தேவைப்படுகின்றது. ஃபாஸ்ட்சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் செய்தால் இதில் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

இந்த மாதிரியான அதிகப்படியான நேரம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய தேவை என்கிற சூழ்நிலை நிலவும் வேலையில் புதிய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் திறன் கொண்ட பேட்டரி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் லித்தியம் கார்பன் அடங்கிய பேட்டரி ஆகும். இதனை தயாரிக்க மிகவும் அரிதான பொருட்கள் தேவைப்படும் என எண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

வழக்கமான பேட்டரியைத் தயாரிக்க பயன்படும் மூலக் கூறுகளைக் கொண்டே இப்பேட்டரியை தயாரித்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், வழக்கமான பேட்டரியின் விலையிலேயே புதிய அதிக வேகத்தில் சார்ஜாகும் பேட்டரியும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

இந்த பேட்டரியை பிரத்யேகமாக இலகு எடைக் கொண்ட மின்சார ஸ்கூட்டர்களுக்காக நிறுவனம் தயாரித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. உயர் ரக பேட்டரிகளில் பயன்படுத்துவதைப் போன்ற அனோட் மற்றும் சூப்பர் கேபாசிட்டர்கள் கேதோடில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் ஆர்கானிக் எலெக்ட்ரோலைட்டுகள் வாயிலாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

இதன் விளைவாக உடனுக்குடன் வெப்பம் வெளியேற்றப்படுதல் செய்யப்படுகின்றது. இதன் வாயிலாக அதிக வேக சார்ஜிங் மற்றும் உயர் மின்சார திறன் வெளியீடு ஆகியவற்றை பெற முடியும். இயற்கையாகவே இவையனைத்தும் செய்யப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இப்படி பேட்டரி விற்பனைக்கு வந்தா தயங்காம எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாம்... நம்ப முடிாயத வேகத்தில் சார்ஜாகும் பேட்டரி!

இந்த மாதிரியான வசதிக் கொண்ட அல்ட்ரா ஃபாஸ்ட் பேட்டரியையே மஹ்லே மற்றும் அல்லோட்ரோப் எனர்ஜி நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. இது பயன்பாட்டிற்கு வரும்போது அதிகபட்சம் 25கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை நிறுவனம் உறுதியாக கூறவில்லை. ஆகையால், இன்னும் மிக சிறந்த வெளிப்பாட்டுடன் இந்த அல்ட்ராஃபாஸ்ட் சார்ஜ் பேட்டரி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படம் 6 முதல் 11 வரை உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Uk based two firms jointly created ultra fast charging battery
Story first published: Saturday, October 9, 2021, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X