இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

பொதுவாகவே வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில் வறட்சியான மாதமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் வருட இறுதி மாதத்தில் அறிமுகம் செய்வதை விட, புதிய ஆண்டின் துவக்கத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவே பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

இருப்பினும் சில நிறுவனங்கள் அந்த ஆண்டிற்காக ஒதுக்கி வைத்திருந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்யும். குறிப்பாக இந்த மாதத்தில் வரும் கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சில புதிய வாகனங்கள் அறிமுகமாகலாம். இந்த வகையில் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் புதிய இருசக்கர வாகனங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

யெஸ்டி ரோட்கிங் அட்வென்ச்சர்

மோட்டார்சைக்கிள் பிரியர்களிடையே, குறிப்பாக கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிரியர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றிருக்கும் மோட்டார்சைக்கிளாக விரைவில் யெஸ்டி ரோட்கிங் அட்வென்ச்சர் சந்தையில் அறிமுகமாகவுள்ளது. பார்ப்பதற்கு அச்சு அசலாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கை போல் இருப்பதாக சில ஆர்வலர்களின் விமர்சகங்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்த பைக்கின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பதிவொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

யெஸ்டி பைக்குகள் பழமை வாய்ந்தவை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அத்தகைய பிராண்டில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மோட்டார்சைக்கிள் ஒன்று விற்பனைக்கு வருகிறது. ரோட்கிங் என்ற பெயரில் ஏற்கனவே மோட்டார்சைக்கிள் யெஸ்டி பிராண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை நினைவு கூறும் விதமாகவே இந்த அட்வென்ச்சர் பைக் கொண்டுவரப்படுகிறதாம்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான பவுன்ஸ் அதன் இன்ஃபினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையினை அறிவித்து, ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இந்த ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ‘சேவையாக பேட்டரி' என்ற தேர்வின் மூலமாக பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டரை பேட்டரி தொகுப்பு இல்லாமலும் வாங்கலாம்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

இதன் மூலமாக குறைந்த விலையில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடியும் என பவுன்ஸ் நம்புகிறது. பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.92,000ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி இல்லாத மாடலின் விலை ரூ.60,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

கேடிஎம் ஆர்சி390

சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி200 பைக்கை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கேடிஎம் அறிவித்துள்ளது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் 2022 ஆர்சி390 பைக்கின் பெயர் கடந்த அக்டோபர் மாத இறுதியிலேயே கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் வெப்சைட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

தற்சமயம் விற்பனையில் உள்ள முந்தைய தலைமுறை ஆர்சி390 பைக் உடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை பெரிய அளவில் தோற்றத்திலும், ஸ்டைலிலும் வேறுப்படுகிறது. கிட்டத்தட்ட 7 கிலோ குறைவான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆர்சி390 பைக்கின் முன்பக்கத்தில் முழு-எல்இடி செட் உடன் புதிய லேஅவுட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்

க்ரூஸர் பைக் பிரியர்களிடையே கவனத்தை பெற்றுள்ள புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிளை இந்த 2021 டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக முன்னதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது. வருகிற டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவுள்ள இந்திய பைக் வாரம் கண்காட்சியில் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

இதற்கிடையில் இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பித்துவிட்டது. இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட 2021 ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கில் இரட்டை-குழாய் எக்ஸாஸ்ட், பருத்த டயர்கள் மற்றும் ஒற்றை-துண்டாக சிறிய அளவில் இருக்கை உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட உள்ளன. இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலையினை ரூ.15- 20 லட்சங்களில் எதிர்பார்க்கிறோம்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகவுள்ள புதிய மோட்டார்சைக்கிள்கள்!! யெஸ்டி ரோட்கிங் முதல் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் வரையில்!

சமீபத்திய அறிமுகம் - 2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி

அப்டேட் செய்யப்பட்ட 2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் ரூ.1,33,840 என்ற விலையில் கடந்த நவ.30ஆம் தேதி சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்டேட்டாக, இந்த பைக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள் (DRL)-உடன் புதிய டிசைனில் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கின் முன்பக்கம் புத்துணர்ச்சியானதாக மாறியுள்ளது.

Most Read Articles

English summary
Upcoming two wheelers expected to launch in december 2021
Story first published: Thursday, December 2, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X