5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 மோட்டார்சைக்கிளின் புதிய டீசர் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

செயல்திறன்மிக்க 1000சிசி மோட்டார்சைக்கிள் எல்லாம் தற்போது சர்வ சாதாரணமாக உலகளவில் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பான்மையானவை ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களாகவே இருக்கின்றன.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

இவற்றை காட்டிலும் எளிமையான ஹேண்ட்லிங், குறைவான எடை கொண்ட நாக்டு வெர்சன் பைக்குகள் கொஞ்சம் அரிதாகவே கொண்டுவரப்படுகின்றன. இத்தகைய 1000சிசி நாக்டு மோட்டார்சைக்கிள்களுள் சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 பைக்கும் ஒன்றாகும்.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

இதன் அப்டேட் வெர்சனை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 தொடர்பான டீசர் வீடியோ ஒன்று சுஸுகியின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது இந்த 1000சிசி பைக்கில் சுஸுகி நிறுவனம் மிக முக்கியமான அப்கிரேட்கள் கொண்டுவரவுள்ளதை அறிய முடிகிறது. 2015ல் இருந்து சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 பைக் கிட்டத்தட்ட கடந்த 5 வருடங்களாக பெரிய அளவில் எந்தவொரு அப்கிரேடையும் பெற்றது இல்லை.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

இந்த நிலையில் தான் இன்னும் சில நாட்களில் இதன் அப்டேட் வெர்சன் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டீசர் வீடியோவின் மூலம் பார்க்கும்போது, பருத்த பெட்ரோல் டேங்க் உடன் புதிய ஹெட்லைட் அமைப்பு புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000-இல் கொண்டுவரப்பட்டுள்ளது.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

நாக்டு பைக்காக இருந்தாலும், பெட்ரோல் டேங்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள இறக்கை போன்ற பேனல்கள் காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றுவது மட்டுமாக இல்லாமல், அப்கிரேட்கள் பைக்கின் செயல்திறனையும் மேம்படுத்துவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

இதனால் ஓட்டுனர்-சார்ந்த எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளையும் 2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 பைக் பெற்றுவரலாம். இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டுமென்றால், கார்னரிங் ஏபிஎஸ், வீலிங் கண்ட்ரோல் வசதி மற்றும் மிகவும் நுண்ணுர்வுமிக்க ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை இருக்கும்.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

என்ஜினில் இருந்து வெளிவரும் உறுமும் சத்தம் சற்று அதிகப்படுத்தப்படலாம். புதிய சுஸுகி வி-ஸ்ட்ரோம் 1050 மற்றும் ஹயபுஸா பைக்குகளை போன்று இதன் மத்திய வேரியண்ட்களையும் முன்பை காட்டிலும் வலிமையானதாக எதிர்பார்க்கலாம்.

5 வருடங்களுக்கு பிறகு அப்டேட் செய்யப்படும் சுஸுகியின் 1000சிசி பைக்!! ஏப்ரல் 26ல் அறிமுகமாகிறது...

ஆனால் டாப் வேரியண்ட்களில் மாற்றம் இருக்காது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 பைக் இந்தியாவிலும் விற்பனையில் இருந்தது. இதனால் இதன் புதிய அப்கிரேட் வெர்சன் இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
English summary
2021 Suzuki GSX S1000 Teased, To Come With Updated Aesthetics.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X