அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 மோட்டார்சைக்கிள் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

காலத்தின் கட்டாயத்தினாலும், அதிகரித்துவரும் விற்பனை போட்டியினாலும், தமிழகத்தில், ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் TVS Motor நிறுவனம் அதன் முதன்மையான மோட்டார்சைக்கிள் மாடலான Apache RR310-ஐ அப்கிரேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

முன்னதாக 2021 Apache RR310 பைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் இருந்து இந்தியாவில் அதிகரிக்க துவங்கிய கொரோனா இரண்டாவது அலையினால் இந்த அப்டேட் பைக்கின் வருகையில் தாமதமானது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

இந்த நிலையில் தற்போது இந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி 2021 RR310 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்படும் என TVS நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Apache RR310 பைக் முதன்முதலாக 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

அதனை தொடர்ந்து 2019ல் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் புதிய பெயிண்ட் தேர்வுகளுடன் இந்த Apache பைக்கை தயாரிப்பு நிறுவனம் அப்டேட் செய்தது. மேலும் இந்த அப்கிரேட்களினால் மோட்டார்சைக்கிளின் இயக்கத்திலும் கூடுதல் மென்மை கிடைத்தது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

இதற்கு பிறகு 2020 ஜனவரி மாதத்தில், புதிய மாசு உமிழ்வு விதியினால், பிஎஸ்6-க்கு இணக்கமான விதிமுறைகளுக்கு ஏற்ப Apache RR310 பைக் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்திலும் ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய டிஎஃப்டி திரை, Smartxonnect இணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் Ride-by-wire throttle போன்ற வசதிகள் புதியதாக கொண்டுவரப்பட்டன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள Apache RR310-இன் 2021 மாடல் குறித்த எந்தவொரு விபரத்தையும் TVS நிறுவனம் தற்போது வரையில் வெளியிடவில்லை. ஆனால் 2021 Apache RR310 பைக் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏற்கனவே பரவ ஆரம்பித்துவிட்டன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

இவற்றின்படி, தேவைக்கு ஏற்றாற்போல் சரி செய்து கொள்ளக்கூடிய முன்பக்க சஸ்பென்ஷன் புதிய Apache RR310 பைக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இத்தகைய சஸ்பென்ஷன் அமைப்பு விற்பனையில் உள்ள Apache RTR200 4V பைக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

அதேபோல் Michelin Road 5 டயர்களுக்கு மாற்றாக TVS Eurogrip Protorq Extreme rubber வழங்கப்பட உள்ளது. மற்றப்படி Apache RR310 பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. TVS Motors-இன் இந்த விலைமிக்க Apache பைக்கில் தலைக்கீழாக சாய்க்கப்பட்ட 312.2சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 34 பிஎஸ் மற்றும் 27.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் அமைப்பில் பெரிய்தாக எந்த மாற்றமும் கொண்டுவரப்பட வாய்ப்பில்லை என்றாலும், அதிர்வுகளை குறைத்து கூடுதல் மென்மையான இயக்கத்திற்காக என்ஜின் வெளிப்படுத்தும் இந்த ஆற்றல் அளவுகளில் சற்று மாற்றங்கள் கொண்டுவரப்படலாம்.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

இல்லையென்றால், ரைடிங் மோட்கள் புதியதாக வழங்கப்படலாம். இவை தவிர்த்து 2021 Apache RR310 பைக்கில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதாவது, என்ஜின் உடன் இணைக்கப்படும் வழக்கமான 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் கூட எந்த அப்கிரேடும் கொண்டுவரப்படாது.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

இதனால் வழக்கம்போல் Rece Tuned ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் உடனே இதன் டிரான்ஸ்மிஷன் அமைப்பு வழங்கப்படும். அதேபோல் ப்ரேக்கிங் பணியினை கவனிக்கவும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் 300மிமீ-இல் முன்பக்கத்திலும், 240மிமீ-இல் பின்பக்கத்திலும் டிஸ்க்குகளே அப்டேட் செய்யப்பட்ட RR310 பைக்கிலும் பொருத்தப்பட உள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட 2021 TVS Apache RR310 பைக்!! இந்த ஆகஸ்ட்டில் அறிமுகமாகவுள்ளது

மேலும், TVS Apache RR310 பைக்கின் ஸ்டைலிலும் பெரியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதீர்கள். தற்சமயம் இந்த 312சிசி Apache பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.54 லட்சமாக உள்ளது. பைக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதால், 2021 RR310 பைக்கின் விலை சற்று அதிகரிக்கப்படலாம்.

TVS Apache RR310 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக உள்ள மாடல்களுள் KTM RC390 மோட்டார்சைக்கிளும் ஒன்றாகும். ஆனால் இதன் விலை RR310 பைக்குடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாக உள்ளது.

Most Read Articles

English summary
Updated 2021 TVS Apache RR310 to be launch on august 30 in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X