வெஸ்பா ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர் வெளியீடு!! சுவிட்சர்லாந்து நாட்டிற்கு மட்டும் தானாம்

லிமிடெட் எடிசன் ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் ஸ்கூட்டரை வெஸ்பா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த வெஸ்பா ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெஸ்பா ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர் வெளியீடு!! சுவிட்சர்லாந்து நாட்டிற்கு மட்டும் தானாம்

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசன் வெஸ்பா ஸ்கூட்டர் வெறும் 300 யூனிட்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது. சூப்பர் ஸ்விஸ், இந்த பெயரை வைத்தே தெரிந்திருக்கும் இந்த ஸ்கூட்டர் எந்த நாட்டில் மட்டும் கிடைக்கும் என்று, ஆம் சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே.

125சிசி மற்றும் 300சிசி என்ஜின் தேர்வுகளில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வெஸ்பா ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் லிமிடெட் எடிசனில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன. இயந்திர அப்கிரேட்கள் எதுவும் இல்லை.

வெஸ்பா ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர் வெளியீடு!! சுவிட்சர்லாந்து நாட்டிற்கு மட்டும் தானாம்

கிரிகியோ மடேரியா என்ற நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லிமிடெட் எடிசனில் பிரத்யேகமான அலுமினிய தகடு பொருத்தப்பட்டுள்ளது. இதில் தான் தயாரிக்கப்படவுள்ள 300 ஸ்கூட்டர்களின் எண்களும் 1 இல் இருந்து 300 வரையில் குறிப்பிடப்படவுள்ளன.

இந்த தனித்துவமான எண்கள் இந்த வெஸ்பா ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் எடிசனை சேமிப்பாளர்களின் வாகனமாக காட்டும். மற்றப்படி வெஸ்பாவின் இத்தகைய லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர்களில் வழங்கப்படும் பாரம்பரியமான தோற்றம் இந்த மாடலிலும் தொடர்ந்துள்ளது.

இந்த ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸின் வெளிப்பக்கம் பளபளப்பான க்ரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள 125சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 14 பிஎச்பி ஆற்றலையும், 300சிசி என்ஜின் 23.8 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியது.

வெஸ்பா ஜிடிஎஸ் சூப்பர் ஸ்விஸ் லிமிடெட் எடிசன் ஸ்கூட்டர் வெளியீடு!! சுவிட்சர்லாந்து நாட்டிற்கு மட்டும் தானாம்

12 இன்ச்சில் டயர்களை பெறுகின்ற இந்த லிமிடெட் எடிசன் ஸ்கூட்டரில் ஏபிஎஸ், எல்இடி விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் துளை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பைக் ஃபிண்டரும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.

இது மொபைல் செயலியாக இல்லாமல் ரிமோட் கண்ட்ரோலாக செயல்படும். சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். ஆதலால் இந்த வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகளே இல்லை.

அதுமட்டுமில்லாமல் இந்திய சந்தையில் தற்போதைக்கு 125சிசி என்ஜினை கொண்ட வெஸ்பா ஸ்கூட்டர்களை மட்டுமே பியாஜியோ இந்தியா குழுமம் விற்பனை செய்து வருகிறது. அதிலும் கடந்த பல மாதங்களாக புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் எதுவும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Vespa GTS Super Swiss Limited Edition Unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X