உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட 2 வெஸ்பா ஸ்கூட்டர்கள் வெளியீடு!!

உலகளவில் விற்பனையைத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்காக 2 சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்களை வெஸ்பா வெளியீடு செய்துள்ளது.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

வெஸ்பா, இது பியாஜியோ நிறுவனத்தின் துணைநிலை பிராண்டாகும். இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகளவில் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. இந்த பணியில் நிறுவனம் ஈடுபடத் தொடங்கிய (உலகளாவிய வர்த்தகம்) 75ம் ஆண்டுகளாகிவிட்டன.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டே இரு சிறப்பு எடிசன் வாகனங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வெஸ்பா ஜிடிஎஸ் மற்றும் வெஸ்பா பிரைம்வேரா ஆகிய மாடல்களின் அடிப்படையில் இரு புதிய ஸ்பெஷல் எடிசன் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இம்மாத இறுதிக்குள் வெஸ்பா விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

வெஸ்பா ஜிடிஎஸ் மற்றும் வெஸ்பா பிரைம்வேரா இரு ஸ்கூட்டர்களையும் சிறப்பு எடிசன் வாகனமாக தோற்றுவிப்பதற்காக சில மாற்றங்களை மட்டுமே நிறுவனம் செய்திருக்கின்றது. அந்தவகையில் தனித்துவமான அணிகலன்கள் மற்றும் நிறங்கள் ஸ்கூட்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

இவற்றைத் தவிர வேறு எந்த மாற்றங்களையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், வெஸ்பாவின் இவ்விரு ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்களும் மிகவும் கவர்ச்சியான வாகனங்களாக காட்சியளிக்கின்றன. காரணம், இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய அப்டேட்டுகளே ஆகும்.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

75ம் ஆண்டின் கொண்டாட்டத்தின் அடிப்படையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் உடல் பகுதியின் சில இடங்களில் 75 என்ற எண் இடம்பெற்றிருக்கின்றன. இதுதவிர, சிறப்பு மெட்டல் பாடி பேனல், கண்ணாடி, குரோம் பூச்சு முனைகள் கொண்ட ஹேண்டில் பார், கவர்ச்சிகரமான அலாய் வீல், பின்பகுதியில் லக்கேஜ் பேக் என பல்வேறு சிறப்பு அணிகலன்களை இந்த ஸ்கூட்டர்களில் காண முடிகின்றது.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

இந்த ஸ்கூட்டரில் கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் விதமாக உடற்பகுதியின் பல்வேறு இடங்களில் குரோம் பூச்சிலான கூடுதல் அணிகலன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது மனதை மயக்கும் தோற்றத்தை ஸ்கூட்டருக்கு வழங்குகின்றது. இவற்றுடன் தொழில்நுட்ப வசதியாக 4.3 அங்குல முழு டிஜிட்டல் திறன் கொண்ட டிஎஃப்டி வண்ண திரை கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

இது பெட்ரோல் அளவு, வேகம், நேரம் மற்றும் பிற முக்கிய தகவல்களை வழங்க உதவும். இதில், ஓர் ஸ்கூட்டர் 125 சிசி பிரிவிலும், மற்றொன்று 300 சிசி பிரிவிலும் களமிறக்கப்பட இருக்கின்றன. இவற்றின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் அறிமுகத்திற்காக இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில், இதுகுறித்த தகவலை எதிர்பார்க்கலாம்.

உலகளவில் விற்பனையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியாச்சு... வரலாற்று நிகழ்வை கொண்டாட சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர்கள் அறிமுகம்!!

வெஸ்பாவின் இவ்விரு வாகனங்களும் இந்தியா வருவது சந்தேகமே. பியாஜியோ, தற்போது இந்தியாவில் எஸ்எக்ஸ்எல் 125, விஎக்ஸ்எல் 125 ம ற்றும் இசட்எக்ஸ் 125 என ஒட்டுமொத்தமாக 9 வகையிலான ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகின்றது.

Most Read Articles

English summary
Vespa Reveals 75th Anniversary Special Edition Scooters Globally. Read In Tamil.
Story first published: Thursday, March 11, 2021, 17:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X