இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

1970களில் விற்பனையில் இருந்த ராஜ்தூத் மினி பைக் ஒன்று இப்போதும் பயன்பாட்டில் இருப்பது நம்மை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இந்த ராஜ்தூத் பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

பழமையான பைக் பிரியர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு ராஜ்தூத் ஜிடிஎஸ் 175 என்ற சிறிய தோற்றம் கொண்ட பைக்கை பற்றி தெரிந்திருக்கும். 1970களில் விற்பனையில் இருந்த இந்த பைக் 1973ல் வெளிவந்த ரஷிகபூரின் பாலிவுட் படத்தின் மூலமாக பாபி என அந்த சமயத்தில் அழைக்கப்பட்டது.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

ஏனென்றால் அந்த படத்தில் இந்த ராஜ்தூத் மினி பைக் பாபி என்றே அழைக்கப்பட்டது. இதன் தயாரிப்பிற்கு ராஜன்ஸ் ஸ்கூட்டர் மற்றும் ரேஞ்சர் மோட்டார்சைக்கிளின் சில பாகங்கள் பயன்படுத்தப்பட்டன.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

இதன் பெயரில் உள்ள ஜிடிஎஸ் 175-இன் முழு விரிவாக்கம் க்ராண்ட் டுரிஸ்மோ ஸ்போர்ட்ஸ் 175 ஆகும். இந்த மினி பைக்கில் அதிகப்பட்சமாக 7.5 பிஎச்பி மற்றும் 12.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 173சிசி 2-ஸ்ட்ரோக் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

1984ல் ராஜ்தூத் ஜிடிஎஸ் 175 பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், இந்த மினி பைக்கை தற்போதும் சிலர் வைத்து கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு மாதிரிதான் தற்போது பைக்வித் கேர்ள் என்ற யுடியூப் பக்கத்தின் மூலம் நம் கண்களுக்கு காட்சி தந்துள்ளது.

வாங்கப்பட்டு கிட்டத்தட்ட 40 வருடங்களை கடந்த போதிலும் இந்த மினி பைக் இப்போதும் சிறப்பான நிலையில் உள்ளது. இந்த வீடியோவில் பைக்கின் முன்பக்கத்தில் சதுர வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் கூடுதலாக இணைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பை பார்க்க முடிகிறது.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

மற்ற பாகங்களை காட்டிலும் பைக்கின் பெட்ரோல் டேங்க் பெரியதாக தோற்றமளிக்கிறது. இந்த பெட்ரோல் டேங்கில் 8 லிட்டர் பெட்ரோலை தாரளமாக நிரப்பலாம். எக்ஸாஸ்ட் குழாயின் சூட்டில் இருந்து ஓட்டுனரை பாதுகாக்க எக்ஸாஸ்ட் குழாயின் மீது தகடு பாதுகாப்பான் உள்ளது.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

பின் இருக்கை பயணியை ஸ்பேர் சக்கரம் பாதுகாக்கும். இருப்பினும் இவ்வாறான தோற்றத்தை கொண்ட மினி பைக்குகளை தற்போதைய போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் பயன்படுத்துவது மிகவும் சவாலானது. அதுவும் பின்னால் பயணியுடன் ஓட்டுவது என்பது முடியவே முடியாது என்று கூட சொல்லலாம்.

இப்போதும் சாலையில் உலா வரும் 1970 ராஜ்தூத் மினி பைக்!! அதுவும் இளம்பெண் பயன்படுத்துகிறாரா? ஆச்சிரியமா இருக்கே

மேலும் இந்த ராஜ்தூத் மினி பைக்கில் மணிக்கு 50 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாது. 50kmph வேகத்தை எட்டவே இந்த பைக் பல நிமிடங்களை எடுத்து கொள்ளும். இருப்பினும் இந்த மினி பைக்கை அதிக பராமரிப்பு செலவை கொண்டுவரும் 2-ஸ்ட்ரோக் என்ஜின் உடன் பயன்படுத்துபவரை பாராட்டியே ஆக வேண்டும்.

Most Read Articles

English summary
Take A Look At This Lovely Rajdoot Bobby From The 1970s
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X