யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

யமஹா நிறுவனம் கடந்த மே மாதத்தில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் யமஹாவும் மற்ற நிறுவனங்களை போல் கொரோனா இரண்டாவது அலை பரவலினால் கடந்த 2021 மே மாத விற்பனையில் பெரிய சரிந்துள்ளது.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

வைரஸ் பரவலால் அரசாங்கங்கள் கொண்டுவந்த ஊரடங்கு உத்தரவுகளுக்கு இணங்க யமஹா நிறுவனமும் தனது தொழிற்சாலையை சில மாநிலங்களில் தற்காலிகமாக சில வாரங்களுக்கு மூடியது. அதேபோல் டீலர்ஷிப் ஷோரூம்களும் ஊரடங்கினால் மூடப்பட்டன.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

இவற்றினாலேயே யமஹாவின் கடந்த மே மாத விற்பனை இதற்கு முந்தைய 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் சுமார் 68.88 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 11,613 இருசக்கர வாகனங்களை யமஹா நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

அதுவே முந்தைய ஏப்ரலில் 37,318 யூனிட் வாகனங்களை விற்றிருந்தது. யமஹா பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் எஃப்.இசட் மோட்டார்சைக்கிள்களே எல்லா மாதங்களில் அதிகம் விற்பனையாகக்கூடியவை. ஆனால் கடந்த மாதத்தில் எஃப்.இசட் பைக்குகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, முதலிடத்தை ஃபேஸினோ ஸ்கூட்டர் மாடல் பெற்றுள்ளது.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்
Rank Yamaha Domestic May-21 Apr-21 Growth (%)
1 Fascino 3,588 5,612 -36.07
2 FZ 3,520 12,298 -71.38
3 RayZR 3,360 7,512 -55.27
4 R15 896 6,022 -85.12
5 MT-15 249 5,692 -95.63
6 FZ25 0 182 -100

கடந்த 2021 மே மாதத்தில் மொத்தம் 3,588 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எஃப்.இசட் பைக்குகள் 3,520 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதில் எஃப்.இசட்25 மாடலை சேர்க்க முடியாது. ஏனெனில் இந்த 250சிசி மோட்டார்சைக்கிள் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட இந்தியாவில் விற்கப்படவில்லை.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

எஃப்.இசட் பைக்குகள் கடந்த ஏப்ரலில் சுமார் 12,298 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் 3,360 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே ஏப்ரலில் 7,512 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்திருந்தது.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

இவற்றிற்கு அடுத்து மற்ற யமஹா மாடல்களின் விற்பனை ஆயிரத்தை கூட தொடவில்லை. அதிகப்பட்சமாக ஆர்15 896 யூனிட்களும், எம்டி15 பைக் 249 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை விற்பனை சந்தை என்பதை காட்டிலும் வாகனங்களை தயாரிக்கும் சந்தையாகவே யமஹா இன்னமும் பார்த்து வருகிறது.

யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு மவுசு குறைக்கிறதா? வெளிச்சம் போட்டு காட்டும் புள்ளிவிபரம்

ஏனெனில் இந்தியாவில் வாகனங்களை தயாரிப்பது என்பது மிகவும் மலிவானதாகும். இதனாலேயே சுமார் 11 விதமான வாகனங்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு யமஹா ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 6 மாடல்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

Rank Yamaha Exports May-21 Apr-21 Growth (%)
1 Crux 5,946 1,756 238.61
2 FZ 5,474 7,376 -25.79
3 RayZR 2,509 4,796 -47.69
4 SZ 1,104 2,108 -47.63
5 FZ25 896 1,324 -32.33
6 R15 518 708 -26.84
7 MT15 400 280 42.86
8 Saluto RX 342 1,260 -72.86
9 Alpha 224 0 -
10 Saluto 92 1,830 -94.97
11 Fascino 7 120 -94.17
Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha 2021 May sales & exports. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X