கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

பிரபலமான ஆர்15 மோட்டார்சைக்கிளின் அடிப்படையிலான யமஹா ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டருக்கு புதியதாக கருப்பு நிற பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த செப்டம்பர் மாதத்தில் யமஹா நிறுவனம் புதிய தலைமுறை ஆர்15 மோட்டார்சைக்கிளாக ஆர்15 வி4-ஐ, ஆர்15 எம் மாடலுடன் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டு மட்டுமின்றி, இவற்றுடன் அதே தினத்தில் ஏரோக்ஸ் 155 என்ற மேக்ஸி-ஸ்கூட்டரும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.1.29 லட்சம் என்கிற விலையில் விற்பனை செய்யப்படும் இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் தற்சமயம் அனைத்து யமஹா ப்ளூ சதுர டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ரேசிங் நீலம் மற்றும் க்ரே வெர்மிலியன் என்கிற இரு விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டன. மேலும் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசனிலும் ஏரோக்ஸ் 155 விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் விலை சற்று அதிகமாக ரூ.1.30 லட்சமாக உள்ளது.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில் இன்று (டிச.06) இந்த மேக்ஸி-ஸ்கூட்டருக்கு புதியதாக மெட்டாலிக் கருப்பு நிறத்தேர்வை வழங்குவதாக யமஹா அறிவித்துள்ளது. பருத்த உடலமைப்பு, கச்சிதமான கட்டமைப்பு மற்றும் ‘X' என்ற வடிவத்தை கொண்ட மத்திய டிசைன் என்கிற 3 முக்கிய சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்படும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு வெள்ளை கலந்த இந்த புதிய மெட்டாலிக் கருப்பு நிற பெயிண்ட் தேர்வு மிகவும் எடுப்பாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

"மனதை-அதிர வைக்கும் ஸ்பீட்ஸ்டர்" கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில், ஆர்15 மோட்டார்சைக்கிளில் வழங்கப்படும் அதே தொழிற்நுட்பங்கள் தான் பொருத்தப்படுகின்றன. மேலும், வெவ்வேறான வால்வு செயல்பாடு தொழிற்நுட்பத்துடனான (VVA) என்ஜின் & இயக்குத்தளம் உள்ளிட்டவற்றையும் ஆர்15 உடனே ஏரோக்ஸ் 155 பகிர்ந்து கொள்கிறது.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றுடன் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் பெறும் மற்ற அம்சங்களாக ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய யமஹா மோட்டார்சைக்கிள் இணைப்பு செயலி, 5.8 இன்ச் எல்சிடி க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப்கள், 12 காம்பெக்ட் எல்இடி பல்புகளை கொண்ட எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்படுகின்ற பொருட்களை வைக்கும் பகுதியில் ஒரு மழை கோட் உடன் ஒரு முழு ஹெல்மெட்டை தாராளமாக வைக்கலாம்.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்மார்ட்போன் இணைப்புடன் வழங்கப்படுகின்ற இதன் 5.8-இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலின் மூலம் வேகம், ஆர்பிஎம், விவிஏ இண்டிகேட்டர் மற்றும் யமஹாவின் ஒய்-கனெக்ட் மொபைல் செயலியின் அறிவிப்புகள், பராமரிப்பு பரிந்துரைகள், கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடம், எரிபொருள் அளவு, வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் உள்ளிட்டவற்றை பெறலாம்.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

5.5 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை பெறும் இந்த ஸ்கூட்டரில் எரிபொருள் நிரப்பும் பகுதி இருக்கை அடியில் இல்லாமல், வெளிப்புறத்தில் வழங்கப்படுகிறது. 14-இன்ச் சக்கரங்களுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ஏரோக்ஸ் 155-இல் கொடுக்கப்படுகிறது. விவிஏ தொழிற்நுட்பத்துடன் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் 155சிசி லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு ப்ளூ கோர் என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 15 எச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

இதனுடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய சிலிண்டர் தலை மற்றும் அளவில் சிறிய எரிபொருள் குடுவை உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் சிறந்த அழுத்த விகிதம் மற்றும் எரிபொருள் திறனை ஏரோக்ஸ் 155-இல் வழங்குகிறது. அத்துடன் அமைதியான என்ஜின் ஸ்டார்ட்டிற்காக ஸ்மார்ட் என்ஜின் ஜெனரேட்டர் அமைப்பு மற்றும் சிறந்த எரிபொருள் திறனிற்காக ஸ்டாப் & ஸ்டார்ட் அமைப்பு போன்றவற்றையும் இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் பெறுகிறது.

கண்ணை கவரும் கருப்பு & வெள்ளை நிறத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! விற்பனைக்கு அறிமுகம்!

1,980மிமீ-இல் நீளம், 700மிமீ-இல் அகலம் மற்றும் 1,150மிமீ-இல் உயரத்தை பெறுகின்ற ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆர்15 வி3-ஐ காட்டிலும் 25மிமீ குறைவாகும். இந்த ஸ்கூட்டரின் எடை 276 கிலோ ஆகும். தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கை 790மிமீ உயரத்தில் உள்ளது. க்ரவுண்ட் க்ளியரென்ஸ் இந்திய சாலைகளுக்கு ஏற்ப 145மிமீ-இல் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
AEROX 155 gets a more Aggressive Appeal with Metallic Black colour.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X