சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

யமஹா நிறுவனம் அதன் ஆகஸ்டு மாத சிறப்பு சலுகை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

இந்தியாவில் இப்போதே பண்டிகைக் காலம் கலை கட்டத் தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில பண்டிகைக் கால சலுகையை வழங்கத் தொடங்கியுள்ளன. சிறப்பு தள்ளுபடி மற்றும் ஆஃபர்களால் வாடிக்கையாளர்களைக் கவரும் பணியில் அவை களமிறங்கியிருக்கின்றன.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

இப்படியான ஓர் பணியிலேயே நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா அறிவித்திருக்கின்றது. இந்நிறுவனம் ஆகஸ்டு 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

என்ன சலுகை:

2021 ஆகஸ்டில் தனது குறிப்பிட்ட இருசக்கர வாகன மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ரூ. 2,999 மதிப்பிலான பரிசை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு சலுகையாக பம்பர் பரிசு மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள கூடுதல் பலன் சலுகையையும் வழங்க இருப்பதாக யமஹா மோட்டார் இந்தியா அறிவித்துள்ளது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

மிக முக்கிய நிறுவனம் இரு விதமான சலுகைகளை அறிவித்திருக்கின்றது. அதாவது, தமிழகத்திற்கான சலுகை, தமிழகம் அல்லாத பிற மாநிலங்களுக்கான சலுகை என இரு வெவ்வேறு விதமான சலுகைகளை யமஹா இந்தியா அறிவித்திருக்கின்றது. அவை பற்றிய தகவல் கீழே,

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

தமிழகம் அல்லாத மாநிலங்களுக்கான சிறப்பு சலுகைகள்:

ரூ. 2,999 மதிப்புள்ள நிச்சய பரிசு, ஸ்கிராட்ச் கார்டு ஆஃபர் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள கூடுதல் பலன்கள் ஆகியவற்றை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், ஸ்கிராட்ச் கார்டு மூலம் ரூ. 35 ஆயிரம் அல்லது பம்பர் பரிசாக ரூ. 1 லட்சம் வரை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது யமஹாவின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

தமிழகம் அல்லாத மாநிலங்களுக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன?

ரூ. 2,999 மதிப்புள்ள நிச்சய பரிசு, கூடுதலாக ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு பலன்கள் ஆகிய குறுகிய சலுகைகளை மட்டுமே யமஹா நிறுவனம் தமிழகர்களுக்காக அறிவித்திருக்கின்றது. தமிழக மக்களுக்கு ஸ்கிராட்ச் கார்டு சலுகையை அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

இத்துடன் மற்றுமொரு சிறப்பு சலுகையையும் யமஹா அறிவித்திருக்கின்றது. அது என்னசிறப்பு சலுகைகள்?

இன்சூரன்ஸ் பலனாக ரூ. 3,876 அல்லது குறைந்த பட்ச முன்தொகை ரூ. 999 என்ற ஆகிய சலுகையை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இந்த சிறப்பு சலுகையானது நிறுவனத்தின் புதிய அறிமுகமங்களான யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் அல்லாத வெர்ஷன், ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் என கூறப்படுகின்றது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

எப்போது வரைக்கும் இந்த சிறப்பு சலுகை கிடைக்கும்?

ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டே இச்சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த மாதம் வரை மட்டுமே சலுகைகளை நம்மால் பெற முடியும். அதாவது, ஆகஸ்டு 31ம் தேதி வரை மட்டுமே யமஹாவின் சிறப்பு சலுகை கிடைக்கும். இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

மேலும், விழாக் காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனை வளர்ச்சியை தூக்கி நிறுத்தும் நோக்கில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விற்பனையை அதிகரிக்க வேண்டும் நினைக்கும் யமஹா ஒரு பக்கம் வாகனங்களின் விலையை உயர்த்தும் பணயிலும் ஈடுபட்டு வருகின்றது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

அந்தவகையில், மிக சமீபத்தில் அதன் குறிப்பிட்ட இரு சக்கர வாகன மாடல்களின் விலையை நிறுவனம் உயர்த்தியது. ஒய்இசட்எஃப்-ஆர்15 வி3, எஃப்இசட் எஃப்ஐ வி3, எஃப்இசட்எஸ் எஃப்ஐ வி3 மற்றும் சமீபத்திய அறிமுகமான ஃபஸ்ஸினோ 125 ஹைபிரிட் ஆகிய இருசக்கர வாகன மாடல்களின் விலையை யமஹா உயர்த்தியது. ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2,500 வரை விலையுயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இது 1.28 சதவீதம் முதல் 2.86 சதவீதம் வரையிலான விலையுயர்வு ஆகும்.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

யமஹா நிறுவனத்தின் இந்த செயல் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அதேசமயம் மறுபக்கம் விலைக்குறைப்பின் வாயிலாக லேசான குளிர்ச்சியை இந்தியர்களுக்கு யமஹா வழங்கியிருக்கின்றது. ஆம், இந்நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடலில் ஒன்றான எம்டி-15 பைக்கின் விலையை மட்டும் கணிசமாக குறைத்தது.

சிறப்பு சலுகையில் பாகுபாடு... தமிழகம், தமிழகம் அல்லாத மாநிலம் என இருவித சலுகைகளை அறிவித்த யமஹா!

யமஹா எம்டி-15 பைக்கின் விலையில் ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது. 0.69 சதவீதம் வரையிலான விலை குறைப்பாகும். மிக சமீபத்திலேயே நிறுவனம் இப்பைக்கின் விலையை ரூ. 1,000 வரை உயர்த்தியிருந்தது. ஏற்றிய இந்த விலையையே தற்போது அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

குறிப்பு: மேலே பார்த்த அனைத்து சலுகையும் ஸ்கூட்டர்களுக்கானவை மட்டமே. மிக விரைவில் ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்களுக்கான சலுகையை நிறுவனம் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha announces special festive offers for 2021 august
Story first published: Friday, August 13, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X